கிட்டத்தட்ட 12 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஒரு நோயாளி அதிலிருந்து மீள வாய்ப்புள்ளது என்றும் பிறகு அவர்களுக்கு இயல்பான நிலைக்கு திரும்ப கூடுமென்றும் தெரிவித்துள்ளனர் .
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது உடலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.? அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாக உள்ளது , அதன் விவரம்:- கொரோனா வைரஸ் வாய் அல்லது கண் மூக்கு வழியாக உடலில் ஊடுறுவுகின்றன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சுவாச பாதை வழியாக உடலுக்குள் ஊடுருவும் இந்த வைரஸ் தொண்டை மற்றும் சுவாச பாதைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டை மற்றும் சுவாச பாதைகளில் நுழையும் கொரொனா உடலில் உள்ள செல்களை தாக்கி கோடிக்கணக்கான கொரோனா வைரஸ்களை உடலில் உற்பத்தி செய்கிறது . இதுகுறித்து சீனாவின் வுகானில் மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தொற்று ஏற்பட்ட நோயாளிக்கு தீவிர காய்ச்சலும், சுமார் 69 .6 சதவிகிதம் அளவுக்கு உடற்சோர்வு 60 சதவீதம் அளவிற்கு வரட்டு இருமல் இருக்குமென கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 31.2 சதவீதம் பேர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர் , 26.1 ஐசியு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவர், வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் பொதுவான காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல் போன்று இருக்கும் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகு இது மிகத் தீவிரமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு நபர் நோய் தாக்கிய பத்தாவது நாளில் ஐசியுவுக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக வயதானவர்களுக்கும் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மற்றும் இருதயக் கோளாறு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது . சிலருக்கு மூன்றாம் நாளில் குமட்டல் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படலாம் என்றும் மூன்று நாட்களுக்குப் பிறகு பசியின்மை போன்ற பிரச்சனைக்கு அவர்கள் ஆட்படலாம் என்றும் 9 வது 10 வது நாட்களில் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆட்படலாம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது .
கிட்டத்தட்ட 12 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஒரு நோயாளி அதிலிருந்து மீள வாய்ப்புள்ளது என்றும் பிறகு அவர்களுக்கு இயல்பான நிலைக்கு திரும்ப கூடுமென்றும் தெரிவித்துள்ளனர் . தற்போதைய நோயினால் பாதிக்கப்படும் 80% பேர் அதிலிருந்து மீண்டு வருகின்றனர் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது . அதாவது இந்த வைரஸ் ஏற்பட்டவுடன் நுரையீரலை கடுமையாக தாக்குகிறது. நுரையீரலில் பன்மடங்கு வைரஸை உற்பத்தி செய்வதால் நுரையீரலில் காற்றுப்பை மற்றும் அதன் பாதைகளை அடைத்து நுரையீரலை செயல் இழக்க வைக்கிறது . இதனால் ரத்தத்திற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் மரணத்தை தழுவுகின்றனர் . இந்த வைரஸால் நுரையீரலை மட்டும் பாதிப்பதில்லை மூக்கு முதல் மலக்குடல் வரை இது பரவக்கூடும் என அமெரிக்காவின் பிராவிடன்ஸ் ஹெல்த் சிஸ்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆமி காம்ப்டன்-பிலிப்ஸ், தெரிவித்துள்ளார். இதனால் இந்த வைரஸ் இரைப்பை குடல் அமைப்புகளை பாதிக்கிறது இதனால் நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார் .