அவரச சிகிச்சைப் பிரிவில் இங்கிலாந்து பிரதமர்...!! கொரோனா காய்ச்சல் தீவிரமானதால் மருத்துவர்கள் அதிரடி..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 6, 2020, 12:44 PM IST

அதேபோல் இங்கிலாந்து மக்களின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு சொல்லும் நெறிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார் .


கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக  தனிமைப்படுத்திக்க கொண்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர்  போரிஸ் ஜான்சன் கொரோனா  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .  இது குறித்து தெரிவித்துள்ளார் அரசு செய்தி தொடர்பாளர் ,  இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால்  அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார் . உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இந்நிலையில் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனாவால்  கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் 55 வயதாகும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பது கூறினார். 

Latest Videos

அதைத் தொடர்ந்து  தன்னைத்தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார் ,  தனது கர்ப்பிணி மனைவியிடம் இருந்து அவர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனிமைப்பட்டு இருந்தார் .  இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்த அவர் தனக்கு காய்ச்சல் மெல்லமெல்ல குறைந்து வருகிறது ,  ஆனாலும் சிறிய அளவில் வைரஸ் அறிகுறிகள் உள்ளது என கூறியிருந்தார் .  விரைவில் குணமடைந்து உங்களை சந்திப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார் .  அதேபோல் இங்கிலாந்து மக்களின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு சொல்லும் நெறிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார் . 

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது இங்கிலாந்தில் பரபரப்பை மிகுந்த ஏற்படுத்தி உள்ளது . முன்னதாக சுகாதாரத் துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளார். ஜான்சனால் தனது பணிகளை செய்ய முடியவில்லை என்றால், வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப், அவரின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.  
 

click me!