கொரோனா வரவில்லையே என்ற விரக்தியில் கணவர்..!! ஆத்திரம் தீர மனைவியை கொலை செய்ய முயற்ச்சி..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 6, 2020, 12:09 PM IST

வீட்டில் தனியாக இருந்த தன்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து அதைத் தன் சிகரெட்டால் பற்ற வைக்க முயன்றார்,


கொரோனா வைரஸ் நிவாரண உதவி பெருவதற்கான பரிசோதனைக்கு தகுதிபெறாத விரக்தியில் இருந்த  நபர் தன் மனைவியை  எரித்து கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது,   தனக்கு கொரோனா வந்து விடக்கூடாது என தற்காப்பு நடவடிக்கைகளில் உலகம் முழுக்க மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால் கொரோனா வைரஸ் பரிசோனைக்கு தான் தகுதி பெறவில்லை என்பதாலும் அதனால்  நிவாரண நிதி தனக்கு கிடைக்காமல் போனது  என்ற ஆதங்கத்தில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த  63 வயது  முதியவர் ஒருவர் அந்த ஆத்திரத்தில் தன் மனைவியை கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சிக் கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

Latest Videos

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது கணவர் மீது காவல் நிலையத்தில் கொலை முயற்ச்சி புகார் ஒன்று கொடுத்துள்ளார்.  அதில் நேற்று மாலை 5 மணிக்கு தனது கணவர் மாகியாஸ் 63 (வயது) என்பவர் ஒரு அட்டைப் பெட்டி நிறைய பீர் பாட்டில்களுடன்  வீட்டிற்கு வந்தார் என்றும்,  அது அனைத்தையும் நிதானமாக அமர்ந்து குடித்த அவர், கொரோனா வைரஸ் நிவாரணம் பெறுவதற்கான பரிசோதனையில் தான் தகுதி பெறவில்லையே என கூறி   புலம்பினார் . நீண்ட நேரம் அந்த  விரக்தியில் இருந்த அவர்,   வீட்டில் தனியாக இருந்த தன்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து அதைத் தன் சிகரெட்டால் பற்ற வைக்க முயன்றார்,  ஆனால் அவர் பல முறை முயன்றும் அது பலனளிக்கவில்லை . அதனையடுத்து  நான் கத்தி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் , 

எனவே தன் கணவனை கைது செய்ய வேண்டுமென அந்த பெண் கோரிக்கை வைத்திருந்தார்.  இந்நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த மெக்சிகோ மாகாண போலீசார் மதுபோதையில் வீட்டில் தனியாக இருந்த  மாற்றுத்தினாளி மனைவியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மாகியாஸ்  கைது செய்தனர் .  அவரிடம் நடத்திய விசாரணையில் தான் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு தகுதி பெற வில்லை, அதனால் தனக்கு அரசு நிவாரணம் கிடைக்காமல் போனது, இதனால் கடுமையான அதிர்சிக்கு ஆளான தான்  இப்படி நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதைக்கேட்டு  அதிர்ச்சியடைந்த போலீசார் மனைவியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவரை அந்த நபருக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன்வர வில்லை என்பது குறிப்பிடதக்கது.  

 

click me!