பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்…. குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலி …இந்தியா பதிலடி…

Asianet News Tamil  
Published : May 13, 2017, 03:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்…. குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலி …இந்தியா பதிலடி…

சுருக்கம்

Pakistan has again been attacked

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குடியிருப்பு வாசிகள் 2 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். 

காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவம் தினசரி ஒரு அத்துமீறலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தத் தாக்குதல்களில் 23 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இன்று ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பீரங்கித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த 15 நாட்களில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் தலையெழுத்தை மாற்றுவாரா இந்த 30 வயது 'மர்மப் பெண்'..? யார் இந்த ஜைமா ரஹ்மான்..?
ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த ஷாக்.. எங்க ஏர்பேஸ் காலி! உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!