பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்த புத்த பிட்சுகள்…இந்தியர்கள் அதிர்ச்சி…

Asianet News Tamil  
Published : May 13, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்த புத்த பிட்சுகள்…இந்தியர்கள் அதிர்ச்சி…

சுருக்கம்

Modi in srilanka

பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்த புத்த பிட்சுகள்…இந்தியர்கள் அதிர்ச்சி…

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க விழா அரங்கிற்குள் நுழைந்தபோது அனைவரும் எழுந்துநின்று அவருக்கு மரியாதை கொடுத்தபோதும், அங்கிருந்த புத்த பிட்சுகள் மோடியை அவமதிக்கும் வகையில் இருக்கைகளில் அமர்ந்திருந்த நிகழ்வு இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றது மற்றும் அவரது இறப்பின் நினைவாக வெசாக்  எனப்படும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

புத்த மதத்தினரின் மிகப்பெரிய திருவிழாவான இந்த வெசாக் தினத்தையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்பேற்றார். கொழும்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக அரங்கிற்குள் நுழைந்த பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமே சிங்கே உள்ளிட்டடோர் எழுந்து நின்று வரவேற்றனர்.

ஆனால் மற்றொருபுறம் அமர்ந்திருந்த புத்த பிட்சுகள் பிரதமரை அவமரியாதை செய்யும் வகையில் வேறு எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

புத்த பிட்சுகளின்  இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசியாவின் மிகப்பெரிய நாட்டின் தலைவர், 120 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் என்ற முறையில் மோடியைப் பார்த்து உலகமே வியந்து கொண்டிருக்கும் நிலையில் புத்த பிட்சுகள் இப்படி நடந்த கொண்டிருக்கக் கூடாது என  பொது மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அன்பு, மரியாதை போன்றவற்றை போதித்தவர்தான் புத்தர். அத்தகைய ஒரு மகானை பின்பற்றுபவர்களின் இந்த நடவடிக்கை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!
வங்கதேசத்தின் தலையெழுத்தை மாற்றுவாரா இந்த 30 வயது 'மர்மப் பெண்'..? யார் இந்த ஜைமா ரஹ்மான்..?