மகிந்தா ராஜபக்சேவை சந்தித்த நரேந்திர மோடி...

Asianet News Tamil  
Published : May 12, 2017, 06:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
மகிந்தா ராஜபக்சேவை சந்தித்த நரேந்திர மோடி...

சுருக்கம்

Prime Minister Narendra Modi met former President Mahinda Rajapaksa in Colombo on Thursday

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்புவிலுள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று  இலங்கைக்கு சென்றார். அவரை கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்று அழைத்துச் சென்றார்.

பின்னர் அவர் கொழும்புவிலுள்ள இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை மே 11ஆம் தேதி நள்ளிரவு சந்தித்தார். இதுகுறித்து, இலங்கைகான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,'இந்த சந்திப்பு குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. இருந்தாலும் முன்னாள் அதிபர் என்கிற முறையில், அவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு நடைபெற்றது' என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபக்சேவின் ஆதரவாளர் ஒருவர் இலங்கை வரும் மோடிக்கு, கறுப்புக் கொடி காட்டப்போவதாகவும், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

மேலும், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, இந்திய பிரதமர் மோடி தன்னை கவர்ந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!
வங்கதேசத்தின் தலையெழுத்தை மாற்றுவாரா இந்த 30 வயது 'மர்மப் பெண்'..? யார் இந்த ஜைமா ரஹ்மான்..?