பாகிஸ்தானின் குள்ளநரித்தனம்... ஒட்டுமொத்தமாக 3 விமானங்களில் வாரிச் சுருட்டிச் செல்லப்பட்ட ஆப்கான் ரகசியங்கள்.!

By Thiraviaraj RM  |  First Published Sep 11, 2021, 11:19 AM IST

ஆப்கானிஸ்தானின்  ஆவணங்களை 3 விமானங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.


ஆப்கானிஸ்தானின்  ஆவணங்களை 3 விமானங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஆப்கானிஸ்தானில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் துணை ராணுவ வீரர்  தலிபானின் கொடியுடன் காத்திருக்கிறார். அவர் ஆப்கானிஸ்தான் தலிபான்களை கட்டுபடுத்தும் ஒரு புகைப்பட வெளியாகி இருக்கிறது. இந்த ஆவணங்களை பாகிஸ்தானுக்கு எடுத்து செல்வதற்கு ஆப்கானிஸ்தான் தூதர் மன்சூர் அகமது ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

 

ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தானிற்கான பொருளாதாரத் திட்டங்களை பாகிஸ்தான் அறிவித்த மறுநாளே, அந்த நாட்டின் முக்கியத் தரவுகளையும் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களின் வடிவத்தில் எடுத்துள்ளது. அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல்களின் 20 வது ஆண்டு நினைவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி புதிதாக நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்க பதவியேற்பை தாலிபான்கள் ரத்து செய்தபோதும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இடைக்கால அரசு செப்டம்பர் 7 அன்று அறிவிக்கப்பட்டது.

ஆதாரங்களின்படி, கடந்த வியாழக்கிழமை காபூலுக்கு மனிதாபிமான உதவி புரிவதாக வந்த மூன்று சி- 170 ரக விமானங்கள் ஆவணங்களை நிரப்பி பாகிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பணிபுரியும் ஒருவர், ‘பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) எடுத்த ரகசிய ஆவணங்கள் அவை. ஆவணங்கள் முக்கியமாக NDSவகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பிற டிஜிட்டல் பதிவுகளை எடுத்துச் சென்றுள்ளன. 

ஐஎஸ்ஐ அதன் சொந்த பயன்பாட்டிற்காக தரவுகளைப் புரிந்துகொள்ளும், இது பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இதன் மூலம் தலிபான் அரசாங்கம் பாகிஸ்தானைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகும் எனக் கூறப்படுகின்றது. முந்தைய அஷ்ரப் கனி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களால் கைப்பற்றப்பட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அந்த டாக்குமெண்டுகள் அப்படியே இருந்துள்ளது.  அடுத்து, அந்த டாக்குமெண்டுகளை கையாளும் ஊழியர்களும் பணிக்குத் திரும்பாததால், இராணுவக் குழுவிற்கு இந்த ஆவணங்கள் மீது எந்தக் கட்டுப்படுத்தும் விவரங்களும் தெரியவில்லை. 

ஆகையால், அந்த ஆவணங்களை பற்றிய விவரங்களை பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் தூதர் மன்சூர் அகமது ஒருங்கிணைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் அந்நாட்டின் முன்னிலையில் புதிய தாலிபான் ஆட்சியை கையிலெடுக்கும் பாகிஸ்தானின் முயற்சி பிரதிபலிக்கிறது.

அண்டை நாடுகளும் பாகிஸ்தான் ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை நடத்த முடிவு செய்துள்ளன. முன்னதாக, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஆப்கானிஸ்தானின் இருதரப்பு வர்த்தகம் அமெரிக்க டாலரில் இருந்தது. ஆப்கானிஸ்தான் நாணயம் சக்திவாய்ந்ததாக இருந்தது. இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தானின் நாணயம் ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் மற்றும் வணிகத்தை கட்டுப்படுத்தும். 


 

click me!