ஆப்கானிஸ்தானுக்கு இத்தனை கோடிகளை அளிக்க முன் வந்துள்ளதா சீனா..!?

By Thiraviaraj RM  |  First Published Sep 10, 2021, 4:27 PM IST

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசிற்கு ஆதரவு தெரிவித்துள்ள 6 நாடுகளில் சீனாவும் ஒன்று. இந்நிலையில் அங்கு தலிபான்கள் அமைத்துள்ள அரசை அங்கீகரித்துள்ள சீனா முதற்கட்டமாக 220 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. 

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் வீடியோ வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஆப்கானில் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய சீன அமைச்சர், ’’முதற்கட்டமாக 220 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குகிறோம். 

Tap to resize

Latest Videos

சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்குறுதிகளை தலிபான்கள் நிறைவேற்ற வேண்டும். ஆப்கன் மக்களுக்கு பொருளாதார மனிதநேய உதவிகளை வழங்கும் கடமை மற்ற நாடுகளை விட அமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் தான் அதிகம் உள்ளது’’என அவர் தெரிவித்தார்

click me!