பாகிஸ்தானில் பதற்றம்...!! இம்ரான்கான் கதை முடிகிறது...?? நாட்டை பிடிக்க இராணுவம் பயங்கர சதி...!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 4, 2019, 9:03 AM IST

பாகிஸ்தானிலுள்ள முக்கிய தொழில் அதிபர்களை அவர் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்  சில நாட்களில் பாகிஸ்தானில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 
 


பாகிஸ்தானில்  இம்ரான் கான் ஆட்சியை கவிழ்த்து  மீண்டும் ராணுவ ஆட்சியை கொண்டுவர அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வா சதி திட்டம் தீட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Latest Videos

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் இம்ரான்கான் இந்தியாவுக்கு எதிராக காட்டமாக பேசி  வரும் நிலையில், அவருக்கு இணையாக அந்நாட்டு ராணுவ தலைவர் பஜ்வாவும் இந்தியாவை  மிரட்டும் தொணியில் பேசி வருகிறார். அதே நேரத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக எடுக்க முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து வருவதால் காஷ்மீர் விவகாரத்தில்  இம்ரான் கான் முறையாக கையாளவில்லை என்ற அதிருப்தி பாகிஸ்தான் மக்களிடத்தில் எழுந்துள்ளது.  எனவே இதை சாதகமாக பயன்படுத்தி,  இம்ரானின் ஆட்சியை கவிழ்த்து ராணுவ ஆட்சியை கொண்டுவர ராணுவ தளபதி பஜ்வா சதிதிட்டம் தீட்டியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் 111 படைப்பிரிவு களுக்கு விடுமுறையை ரத்து செய்து அவர் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்போதும் பாகிஸ்தான் ஆட்சி கவிழ்ப்புக்கு 111 படைப்பிரிவுகள் மட்டுமே காரணமாக இருந்து உள்ள நிலையில் மீண்டும் அதே உத்தியை பஜ்வா கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.  இதற்காக பாகிஸ்தானிலுள்ள முக்கிய தொழில் அதிபர்களை அவர் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்  சில நாட்களில் பாகிஸ்தானில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

 

இதுவரை ஏற்கனவே பாகிஸ்தானில் மூன்று முறை ஆட்சிக்கவிழ்ப்பு நடந்துள்ளது முதல்முறையாக  1958ல் பாகிஸ்தான்  பிரதமர் பெரோஸ்கான் நூனின் அரசாங்கத்தை கவிழ்த்து ராணுவ தளபதி    அயூப்கான் நாட்டை பிடித்தார்,  பின்னர்  1971- ல் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதையடுத்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஜியா-உல்-ஹக் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் ஆட்சியை கவிழ்த்து ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார்.  இறுதியாக 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை அடுத்து அந்நாட்டின் ராணுவ தலைமை ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்து ராணுவ ஆட்சியை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

click me!