
இந்நிலையில் பாகிஸ்தானில் அந்நாட்டு டேட்டிங் ஆப் நிறுவனம் ஒன்று வைத்த பேனர் தற்பொழுது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இணைய வாசிகளின் கேளிக்கும், கிண்டலுக்கு அந்த பேனர் உள்ளாகியுள்ளது என்றே கூறலாம். மிகப்பெரிய அளவில் சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்ட அந்த பேனரில் "Cousins to choro, Koi aur dhoondo"என்று எழுதப்பட்டிருந்தது.
அதாவது கசின்ஸ் (உறவினர்களை) அல்லாமல் வேறு நபர்களை தேடுங்கள் என்ற வாசகம் தான் அது. இது பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் Muzz என்ற டேட்டிங் ஆப் வெளியிட்ட ஒரு விளம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்ச்சையை எழுப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் பெரும் விவாதங்களை நெட்டிசன்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அந்த பேனரின் புகைப்படத்தை பகிர்ந்து பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக ட்விட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டிருந்த பதிவில் "muzz app என்பது ஷாம் திருமணங்களுக்கான ஒரு தொடக்கம் மற்றும் அனைத்து இஸ்லாமிய சட்டவிரோத குடியேறிகளையும் சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சி என்று எனக்கு ஏன் வலுவான உணர்வு உள்ளது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒரு ட்விட்டர் பயனர் எழுதுகையில் "இந்த ஆஃப் கூட உங்களால் சோர்வடைந்துள்ளது" என்று எழுதியுள்ளார். மேலும் ஒருவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "ஜின்னா பாகிஸ்தானை உருவாக்கினார், அதனால் அங்கு வாழும் முஸ்லிம்கள் தங்கள் உறவினர்களை எளிதாக திருமணம் செய்து கொள்ளலாம்" என்றும் எழுதியுள்ளார்.
Muzz என்பது முஸ்லீம் திருமணம் மற்றும் டேட்டிங் ஆப் ஆகும், இது ஷாஜாத் யூனாஸ் என்பவரால் நிறுவப்பட்டது மற்றும் 2015ல் தொடங்கப்பட்டது. இதன் டேக்லைன் "சிங்கிள் முஸ்லிம்கள் சந்திக்கும் இடம்" மற்றும் "முஸ்லிம்கள் சந்திக்கும் இடம்" என்பதாகும்.
கிறிஸ்துமஸை முன்னிட்டு அரை நிர்வாண ஓட்டம்! ஹங்கேரியின் வித்தியாசமான கொண்டாட்டம் ஏன் தெரியுமா?
"4,00,000 முஸ்லீம் திருமணங்கள் மற்றும் 500 புதிய ஜோடிகளுடன் தனித்தனி முஸ்லிம்களை சந்திக்க அமெரிக்காவின் மிகப்பெரிய முஸ்லீம் டேட்டிங் மற்றும் திருமண செயலியாக Muzz உள்ளது. முஸ்லீம் டேட்டிங் பயன்பாட்டில், சக்திவாய்ந்த பில்டர் முதல் பிரத்தியேக சாட்டிங் அனுபவங்கள் வரை உங்கள் சரியான முஸ்லீம் கூட்டாளரை பாதுகாப்பான மற்றும் ஹலாலான வழியில் சந்திக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு அம்சங்களை நாங்கள் சேர்த்துள்ளோம்" என்று அந்த நிறுவனம் தனது கூகுள் பிலே ஸ்டோரில் கூறியுள்ளது.