"பணயக்கைதிகள் உயிருடன் திரும்பமாட்டார்கள்".. ஹமாஸ் விடுத்த எச்சரிக்கை - காசாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்!

By Ansgar R  |  First Published Dec 11, 2023, 12:53 PM IST

Hamas Israel Conflict : கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடும் போர் நிலவி வருகின்றது. இந்த கொடூர போரில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது பெரும் வேதனை அளிப்பதாக உலக நாடுகள் கூறி வருகின்றன.


இந்நிலையில் கைதிகளை விடுவிப்பதற்கான அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எந்தவொரு இஸ்ரேலிய பணயக்கைதிகளும் உயிருடன் அந்த பிரதேசத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என்று ஹமாஸ் எச்சரித்ததை அடுத்து, இன்று திங்களன்று தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளது. 

இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின்படி, 1,200 பேரைக் கொன்று, 240 பணயக்கைதிகளை மீண்டும் காசாவிற்கு அழைத்துச் சென்றபோது, ​​​​அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கொடூரமான தாக்குதலை நடத்திய ஹமாஸ் மோதலைத் தூண்டியது. ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் படி, இஸ்ரேல் இராணுவத் தாக்குதலுடன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. 

Tap to resize

Latest Videos

லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் ஜப்பானிய கடற்கரை! அணுக்கழிவைக் கொட்டியது காரணமா?

அதில் காசாவின் பெரும்பகுதி இடிபாடுகளாக மாறியது என்றும், குறைந்தது 17,997 பேர் கொல்லப்பட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பலியானவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று திங்களன்று நடந்த இஸ்ரேலிய தாக்குதல்கள் கான் யூனிஸ் நகரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் வெளியிட்ட எச்சரிக்கையில், இஸ்ரேல் "தங்கள் பணையக்கைதிகளை ஒரு பரிமாற்றம், பேச்சுவார்த்தை மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை உயிருடன் பெறாது" என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. காஸாவில் இன்னும் 137 பணயக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது, அதே நேரத்தில் சுமார் 7,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

காருக்குள் இலவச WiFi.. இனி சிங்கப்பூரர்களுக்கு ஒரே ஜாலி தான் - சிறப்பு சலுகையை அதிரடியாக அறிவித்த Strides!

பல மாதங்களாக கடுமையான குண்டுவீச்சு மற்றும் மோதல்கள் காசாவின் சுகாதார அமைப்பை சரிவின் விளிம்பில் கொண்டுசென்றுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகள் செயல்படவில்லை மற்றும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். காணும் இடமெல்லாம் இடிபாடுகள் மட்டுமே மிஞ்சுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!