Hearing Loss: 100 கோடி இளைஞர்கள் காது கேளாமல் போக ஆபத்து ! ஹெட்போன், இயர்பட் பயன்பாடு குறித்து எச்சரிக்கை

By Pothy Raj  |  First Published Nov 16, 2022, 2:34 PM IST

உலகளவில் ஹெட்போன், இயர்பட் பயன்பாடு, அதிகமான சத்தத்தில் இசை கேட்பது போன்றவற்றால் 100 கோடி இளைஞர்கள், பதின்வயதினர் செவித்திறன் பாதிக்கப்பட்டு, காதுகேளாமைக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.


உலகளவில் ஹெட்போன், இயர்பட் பயன்பாடு, அதிகமான சத்தத்தில் இசை கேட்பது போன்றவற்றால் 100 கோடி இளைஞர்கள், பதின்வயதினர் செவித்திறன் பாதிக்கப்பட்டு, காதுகேளாமைக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சவுத் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி  பிஎம்ஜே குலோபல் ஹெல்த் எனும் மருத்துவ இதழில் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

இதற்காக 12 முதல் 34 வயதுள்ளவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக 19,406 பேரிடம் பரிசோதனைநடத்தப்பட்டது. 33 வகைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 17 ஆய்வுகள், தனிப்பட்ட கேட்கும் கருவிகளான ஹெட்போன், இயர்பட் பயன்படுத்துவர்களிடமும், 18 ஆய்வுகள், அதிக சத்தம் வரும் பொழுதுபோக்கு இடங்களிலும் நடத்தப்பட்டது.

பிலிப்பைன்ஸில் பிறந்த உலகின் 800-வது கோடி குழந்தை! 600,700வது கோடி குழந்தை விவரம் தெரியுமா

ஆய்வாளர்கள் கூறுகையில் “ எங்கள் ஆய்வு என்பது இப்போதுள்ள காலகட்டத்துக்கு தேவையானது. உலகளவில் விரைவில் 100 கோடி இளைஞர்கள், பதின்வயதினர் ஹெட்போன், இயர்பட் பயன்படுத்துவதால் செவித்திறன் பாதிக்கப்பட்டு காதுகேளாமைக்கு ஆளாக இருப்பதால், அதில் அரசுகள், சமூக அமைப்புகள், தொழிற்சாலைகள், கவனம் செலுத்த வேண்டும், பாதுகாப்பான முறையில் இசையே கேட்க அறிவுறுத்த வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, உலகளவில் தற்போது 43 கோடி இளைஞர்கள் செவித்திறனை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் குறிப்பாக பதின்வயதினர், தங்களின் தனிப்பட்ட கேட்கும் கருவிகளான(பிஎல்டி) ஹெட்போன், இயர்பட், ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் அதிகமான சத்தத்துடன் இசையே கேட்கிறார்கள், படங்கள் பார்க்கிறார்கள். இது அவர்களின் உடலுக்கும், செவிக்கும் ஆபத்தாகும்.

குறிப்பிட்ட டெசிபல் அளவில்தான் இசை கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. இதற்கு முன் ஆய்வாளர்கள் அறிவுறுத்தலின்படி, பிஎல்டி பயனாளிகள் அதிகபட்சமாக 105 டெசிபல் வரை பயன்படுத்தலாம் என்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் 104 முதல் 112வரை சராசரியாக இருக்கலாம் எனத் தெரிவித்தது.

நான் ரெடி! அமெரிக்க அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

பதின்வயதினருக்கு 80 டெசிபல் மற்றும் குழந்தைகளுக்கு 75 டெபிசல் என்ற அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை கூட மீறுகிறது. பதின்வயதினர் மற்றும் இளைஞர்களிடையே பாதுகாப்பில்லாத வகையில் கேட்கும் கருவிகளான ஹெட்போன், இயர்பட் பயன்படுத்துவதால், காது கேளாமை  உருவாகும்.

2022ம் ஆண்டில் 12 முதல் 34 வயதுள்ளவர்களில் 280 பேர் காதுகேளாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதற்கு முக்கியக் காரணமாக பாதுகாப்பில்லாத முறையில் அதிக சத்தத்தில் இசை கேட்பதும், அதிக சத்தம் எழுப்பும் பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதாகும்எனத் தெரிவித்துள்ளனர்


 

click me!