உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடிருந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடிருந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், காவல்நிலையங்கள் என பல முக்கிய கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதலில் உக்ரைனில் இருக்கும் பல முக்கிய நகரங்கள் உருக்குலைந்து போயியுள்ளன. உக்ரைனின் மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர். ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த மனு மீதான விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார்.
அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் போர் என்ற பெயரில் தங்களது நாட்டுக்குள் புகுந்து ரஷிய படைகள் சட்ட விரோத தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கூறி உள்ளது. போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் உக்ரைன் ரஷ்யா மீது குற்றம்சாட்டியது. உக்ரைனின் மனு மீது சர்வதேச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இனப்படுகொலை நடத்தி வருவதாக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா அறிவித்துள்ளது.