
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் முழுமையான முப்படை ரீதியிலான மோதல் வெடித்து இருந்தது. இந்த மோதலுக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக் கிழமைக்கு மேல் இருபக்கமும் அமைதி காக்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர்:
காஷ்மீரில் இருக்கும் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி இருந்தனர். இதில் 26 பேர் உயிரிழந்து இருந்தனர். இது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைத்து இருந்தது. இந்த தாக்குதலில் 9 இடங்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார்.
சீனாவின் தோல்வி அடைந்த JF 17, J 10
இந்தியா அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானின் விமான தளங்களையும் நொறுக்கியது. பாகிஸ்தான் சீனாவில் இருந்த இறக்குமதி செய்யப்பட JF 17, J 10 ஆகிய போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. ஆனால், இந்த போர் விமானங்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. இந்தியாவின் எந்த பகுதியையும் JF 17, J 10 தாக்கவில்லை. இந்த போர் விமானங்களை இந்தியாவின் S 400 வான்தடுப்பு மையம் அழித்தது. அல்லது சீனாவின் அந்த போர் விமானங்கள் தானாக செயல்படாமல் தரையில் விழுந்தன.
டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஏன்?
இந்த நிலையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. போர் நிறுத்தம் அறிவிப்பை செய்வதற்கு டொனால்ட் டிரம்ப் யார் என்ற கேள்வியை பல தரப்பிலும் எழுப்பி இருந்தனர்.
சீனாவின் பங்குகள் விலை ஏற்றம்:
ஏன் சீனாவும், பாகிஸ்தானும் பாய்ந்து வருகின்றன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்த தருணத்திலும் தங்களது ஏவுகணைகள், போர் விமானங்கள் தான் நன்றாக செயல்பட்டன என்று விளம்பரம் செய்து வருகின்றனர். தங்களது பொருளாதாரத்தை நிலைநிறுத்த, போர் விமானங்கள் தொடர்பான பங்குகளை உயர்த்திக் கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். தற்போது இதை வைத்து சீனாவின் JF 17, J 10 போர் விமானங்களின் பங்குகள் கடந்த நாட்களில் உயர்ந்தது. இந்த விமானங்கள் தான் இந்தியாவின் போர் விமானங்களை, ஏவுகணைகளை அழித்ததாக சீனா மார்தட்டிக் கொள்கிறது. ஆனால், நடந்தது வேறு. இவை இந்தியாவுக்கு எதிராக செயல்படாமல் தோல்வி அடைந்தது. ஆனால், இதற்கான ஆதரங்களை பாகிஸ்தான் ராணுவத்தால் நிரூபிக்க முடியவில்லை.
பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா பதிலடி:
மறுபக்கம் இந்தியாதான் பாகிஸ்தானின் 11 விமான தளங்களை சல்லடையாக்கியது. அந்த விமான தளங்களில் சீனாவின் PL 15 ஏவுகணைகளை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியது. பாகிஸ்தான் விமான தளங்களில் நிறுத்தியும் வைத்து இருந்தது. ஆனால், இந்தியாவின் ஏவுகணைகளை மறித்து தாக்கும் திறன் அற்றதாகவே இருந்தது. இதுவும் தோல்வி அடைந்தது. இந்தியாவின் S 400 வான் பாதுகாப்பு அமைப்பை சீனாவின் PL 15 ஏவுகணை அழித்ததாக கட்டுக்கதையை பாகிஸ்தான் அவிழ்த்து விட்டது. ஆனால், இது உண்மையில்லை. இது மட்டுமில்லை, பாகிஸ்தான் ஹைபர்சோனிக் ஏவுகணை வைத்து இருந்ததாகவும், இதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியதாகவும் சீனா கூறியது. ஆனால், இதை உடனடியாக ஆதாரத்துடன் இந்திய ராணுவம் மறுத்தது.
S 400 - HQ-9 எது சிறந்தது?
சீன போர் விமானங்களின் தோல்வியை மறைப்பதற்காக கட்டுக்கதையை கூறி வருகிறது. S 400 வான் பாதுகாப்பு அமைப்பை போன்றதுதான் HQ9. சீனாவின் இந்த வான் பாதுகாப்பு அமைப்பும் தோல்வியை தழுவியது. சீனாவால் உருவாக்கப்பட்ட HQ-9 அமைப்பு, விமானங்கள், கப்பல் ஏவுகணைகள், UAVகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 120 கிமீ வரம்பை எட்டக் கூடியது. HQ-9B இல் 300 கிமீ வரை நீண்டுள்ளது. மேலும் 50 கிமீ உயரத்தில் உள்ள பொருட்களை குறிவைக்கும். 180 கிலோ எடையுள்ள உயர்-வெடிக்கும் திறன் கொண்ட ஆயுதம் ஏந்தி செல்லும். இந்தியாவின் S-400 ஐ விட குறைவான திறன் கொண்டதாக இன்றளவும் கருதப்படுகிறது.
சீனாவின் PL-15E:
சீனா வழங்கிய PL-15E நீண்ட தூர வான்-வான் ஏவுகணையின் இரண்டு முழுமையான மற்றும் மூன்று துண்டுகள் இந்தியாவில் மீட்கப்பட்டுள்ளன. துண்டுகளில் ஒன்று சீன எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இது ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமான Zhuzhou Hongda-ன் தயாரிப்பு என்று அடையாளம் காட்டுகிறது. ஆனாலும், சீனாவும், பாகிஸ்தானும் மறுத்து வருகின்றன. அவர்களின் பொய் பிரச்சாரத்திற்கு பின்னர் ஏறி வந்த பங்குகளின் மதிப்பு தற்போது வீழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் தந்திரம் f 18 super hornet
அமெரிக்காவோ மறுபக்கம் தனது f 18 super hornet போர் விமானத்தை இந்தியாவை வாங்க வைக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதி வருகிறது. பிரான்சில் இருந்து இந்தியா வாங்கி இருக்கும் ரபேல் போர் விமானம் சிறந்தது. அமெரிக்காவின் f 18 super hornet உடன் ஒப்பிடுகையில் தரத்தில் ரபேல் தான் சிறந்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரபேல் திறனற்றது என்ற மாயை அமெரிக்கா உருவாகக நினைக்கிறது. இத்துடன் F 35 போர் விமானத்தையும் இந்தியாவிடம் விற்பதற்கு தந்திரங்களை கையாண்டு வருகிறது.
இந்தியாவின் ஆயுத பலமும், உள்நாட்டு தயாரிப்பும்:
இந்தியா அமைதியாக உலகிற்கு தனது முப்படைகளின் பலத்தை மட்டுமில்லாமல், ஆகாஷ், ஆஸ்ட்ரா, S - 400, அக்னி, பிருத்வி போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள், பிரம்மோஸ் மற்றும் நிர்பய் போன்ற குரூஸ் ஏவுகணைகள், நாக் போன்ற டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஆகாஷ் மற்றும் திரிசூல் போன்ற தரையிலிருந்து வான் ஏவுகணைகள் என்று பல்வேறு தயாரிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உலகிற்கே இன்று விற்பனை செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. ஒருநாள் ஆயுத உற்பத்தியில், தொழில்நுட்பத்தில் உலகிற்கே இந்தியா சவால் விடும் என்பதில் சந்தேகமில்லை.