Jaffna City:ஆசியாவில் குறைத்து மதிப்பிடப்பட்ட சுற்றுலாத் தளங்களில் இலங்கையின் முக்கிய நகருக்கு இடம்

By Pothy Raj  |  First Published Jan 9, 2023, 12:56 PM IST

ஆசியாவில் குறைத்து மதிப்பிடப்பட்ட 18 சுற்றுலா நகரங்களில் இலங்கையின் யாழ்ப்பாணம் நகரமும் இடம்பெற்றுள்ளது.


ஆசியாவில் குறைத்து மதிப்பிடப்பட்ட 18 சுற்றுலா நகரங்களில் இலங்கையின் யாழ்ப்பாணம் நகரமும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் சிஎன்என் சேனல் இந்த சுற்றுலாத் தளங்களை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றுலாத் தளங்களில் பார்க்க வேண்டிய பல அம்சங்கள், நல்ல இடங்கள், ஓய்வெடுக்கு அமைதியான இடங்கள், கண்கவர் காட்சிகள், விலைமலிவான தங்குமிடங்கள், தரமான உணவுகள், குறைந்த செலவு என பல இருந்தும் பெரும்பாலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு புலப்படவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

அமெரிக்காவில் செட்டிலாகும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே?

அந்த வகையில் அழகு கொட்டிக்கிடக்கும் இலங்கையின் யாழ்ப்பாணம் நகரமும் ஒன்று. தமிழர்கள் அதிகம் வசிக்கும், தமிழ் கலாச்சாரம் மேலோங்கித் தெரியும், தமிழர்களின் பாரம்பரியங்கள், பழக்கங்கள், மரபுகள், உணவுகள் என அனைத்தும் தமிழகம் போன்று காட்சியளிக்கும் நகராக யாழ்ப்பாணம் திகழ்கிறது.

H1-B விசா கட்டணத்தை 332 சதவீதம்வரை உயர்த்துகிறது அமெரிக்கா! எவ்வளவு உயர வாய்ப்பு?

ஆனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தென்கடற்கரை, மத்திய தேயிலைத் தோட்டப்பகுதிக்கு செல்கிறார்களேத் தவிர யாழ்ப்பாணம் நகருக்கு வருவதில்லை.

இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தில் அழகான கலாச்சாரம், மொழி, உபசரிப்பு என தனக்கே உரிய தனித்துவத்தில் இருக்கிறது. இங்குள்ள வெள்ளையர் காலத்து பழமையான யாழ்ப்பாண நூலகம், நல்லூர் கந்தசாமி திருக்கோயில் போன்ற இடங்கள் உள்ளன. 

இலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பேருந்து மற்றும் கார்களில் செல்வது என்பது சாவாலான பயணம், நீண்ட தொலைவு என்பதால் என்னமோ வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் கண்களில் படாமல் உள்ளது.

டச்சுகாலணியின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் நகரம் நீண்டகாலம் இருந்தது, அதனால்தான் இன்னும் யாழ்ப்பாணம் நகரில் டச்சுக்காரர்களின் சுவடுகளோடு கட்டிங்கள் பழமைமாறாமல் உள்ளன. இங்கு விளையும் மாம்பழங்கள், வாழைப்பழங்கள் இலங்கையில் மிகவும் புகழ்பெற்றவை.

டோக்கியோவை விட்டு வெளியேறும் பெற்றோருக்கு ரூ.6.20 லட்சம் பரிசு: ஜப்பான் அரசு வழங்க காரணம் என்ன?

அதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் அரிசிச்சோறு, மீன் குழம்பு, ஊறுகாய் போன்ற பாரம்பரிய உணவுகள் தரமானதாக இருந்தாலும் விலை மலிவானவை. இவ்வளவு சிறப்புகள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோதிலும் இன்னும் சர்வதேச பார்வையாளர்கள் கவனத்தில் இல்லாமல் இருக்கிறது.

இது தவிர, 17 வகையான இடங்களையும் சிஎன்என் சேனல் பட்டியலிட்டுள்ளது. அதில், கம்போடியாவின் பேன்டி சமார், தைவானின் கென்டிங் நகரம், வியட்நாமின் லா ஹா பே, தென்கொரியாவின் கோகுன்சான் தீவு,  சீனாவின் டென்சாங், லீசான், வங்கதேசம், லாவோஸின் பக்சேநகரம், இந்தோனேசியாவின் சமோசிர் தீவு, சிங்கப்பூரின் புலாவ் உபின் நகரம், இந்தியாவில் மேகாலயா, பில்பைன்ஸின் தாவோவ், வியட்நாமின் தலாட் ஜப்பானின் நிக்கோ நகரம், பாகிஸ்தானின் கர்து , தாய்லாந்தின் இசான் நகரம், மலேசியாவின் இபோ நகரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்ட சுற்றுலாத்தளங்களாகும்.

click me!