ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இலங்கிலாந்தில் வரும் 18 ஆம் தேதி மக்கள் அனைவரும் ஒரு நிமிச மௌன அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இலங்கிலாந்தில் வரும் 18 ஆம் தேதி மக்கள் அனைவரும் ஒரு நிமிச மௌன அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், உடல்நலக்குறைவால் கடந்த 8 ஆம் தேதி காலமானார். பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் கடந்த 11 ஆம் தேதி பால்மோரல் கோட்டையில் இருந்து புறப்பட்டு எடின்பர்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. நேற்று ராணியின் உடல் செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையும் படிங்க: எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்… யாராக இருந்தாலும் பஸ்ஸில் தான் வர வேண்டுமா?
பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக எலிசபெத் உடல் வைக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். ராணி எலிசபெத் உடல் இன்று தனி விமானம் மூலம் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்குக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக 4 நாட்கள் வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடுவானில் விமானத்தில் கோளாறு.. அந்த திகில் நிமிடங்கள் - தப்பித்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
இந்த நிலையில் ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி வரும் 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் தேதி எலிசபெத்தின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அன்று இங்கிலாந்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.