அதிபராவதற்கான அடிப்படை நேர்மை இல்லாதவர் டிரம்ப் - அமெரிக்க அதிபர் ஒபாமா ‘காரசார’ விமர்சனம்

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 06:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
அதிபராவதற்கான அடிப்படை நேர்மை இல்லாதவர் டிரம்ப் - அமெரிக்க அதிபர் ஒபாமா ‘காரசார’ விமர்சனம்

சுருக்கம்

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வருவதற்கான அடிப்படை நேர்மைகூட இல்லாதவர். பொறுமையும், புத்திசாலித்தனமும் இல்லாதவர் அதிபராகக் கூடாது என அதிபர்ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்தார்.

தேர்தல்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிகிறது. இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்ய அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில்ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களுக்கு இடையே 2 கட்ட விவாதம் முடிந்த நிலையில்,  கருத்துக்கணிப்பில் ஹிலாரியேமுன்னிலை வகிக்கிறார்.

பிரசாரம்

இன்னும் அதிபர் தேர்தலுக்கு 4 வாரங்களே இருக்கும் நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு கரோலினா மாநிலத்தில் நேற்று முன் தினம் நடந்த பிரசாரத்தில்ஹிலாரியை ஆதரித்து அதிபர் ஒபாமா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

திறமையில்லாதவர்

குடியரசுக்கட்சி வேப்டாளர் டொனால்ட் டிரம்புக்கு பொறுமை, எதையும் சீர்தூக்கிபார்க்கும் திறன், புத்திசாலித்தனம் என எதுவுமே இல்லை. அதிபராக வருவதற்கான அடிப்படை நேர்மை கூட இல்லாதவர்தான் டிரம்ப். கடந்த இருமுறை குடியரசுக் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்ட ஜான் மெக்கெயின், மிட் ரோம்னி ஆகியோரில் இருந்து டிரம்ப் மிகவும் வேறுபட்டவர்.

மரியாதை குறைவு

ஜான் மெக்கையின், மிட் ரோம்னி ஆகியோருடன் நான் போட்டியிடும் போது நாட்டின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் சமூக சிக்கல்கள் குறித்து கடுமையாக விவாதங்கள் செய்திருக்கிறேன். தேர்தலின் போதும் எங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. விவாதங்களும் காரசாரமாக இருந்து இருக்கிறது. ஆனால், நாங்கள் அமெரிக்காவை சிறப்பான நிலைக்கு கொண்டு செல்வதற்கான திட்டம் எங்களிடம் இருந்தது உண்மை. நான் ஒருபோதும் எனக்கு எதிராக போட்டியிட்டவர்களை மரியாதை குறைவாக நினைத்தது இல்லை.

இவர்கள் அதிபர்களாக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்கா கட்டுப்பாட்டை இழந்து செயல்படும் என நான் நினைக்கவில்லை. அவர்கள் வெவ்வேறு கட்சியைச் சார்ந்த, வெவ்வேறு சித்தாந்தங்களை உடையவர்கள் என்று மட்டுமே நினைத்தேன்.

தகுதியற்றவர்

ஆனால், டிரம்ப் கடந்த 2005-ம் ஆண்டு பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசிய வீடியோ வெளியான பின், அவர் அதிபராவதற்கு அடிப்படை தகுதியற்றவர் என கருதுகிறேன். டிரம்பின் கூச்சல், புண்படுத்தும் பேச்சு ஆகியவை அவர் தகுதியற்றவர் என்பதைத்தான் காட்டுகிறது.

பெண்கள் குறித்து டிரம்ப் கொண்டுள்ள எண்ணங்கள் குறித்து நான் முன் அறிந்தது அனைத்தும் உண்மைதான்.  சிறுபான்மையினர் குறித்தும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கைகள் குறித்தும், மாற்றுத் திறனாளிகளை கேலி செய்தது குறித்தும், டிரம்ப் நினைத்து வைத்திருந்தது அனைத்தும் உண்மையே

ஹிலாரிபுத்திசாலி

தற்போது அதிபர் போட்டியில் உள்ள ஹிலாரி கிளிண்டன் மட்டுமே அடுத்த அதிபராக வருவதற்கு தகுதியான நபர். ஒரு எம்.பி.யாக, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அனுபவமானவர் ஹிலாரி.ஹிலாரியின் புத்திசாலித்தனத்தையும், பல்வேறு சந்தர்பங்களில் முடிவு எடுக்கும் திறமையையும், பொறுமையையும், நான் பார்த்திருக்கிறேன். அதிபராக வருவதற்கு ஹிலாரிக்கு முழுத்தகுதியும் உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?
பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!