கொரோனா பரவலுக்கு முன் ஓரளவுக்கு வருமானம் ஈட்டி வந்த குடும்பங்கள் இப்போது வருமையின் காரணமாக கடன் அட்டைகளைப் பெறுவதின் மூலம் மேலும் வறுமைக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது என இங்கிலாந்தின் குழந்தை வறுமை நடவடிக்கைக் குழுவின் இயக்குனர் லூயிசா மெக்கீஹான் கூறினார்.
கரோனா எதிரொலியாக பிரிட்டனில் நாளுக்குநாள் வறுமை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . ஏற்கனவே பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் எதிரொலியாக பிரிட்டனில் நடத்தப்பட்டுவரும் ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் , முடக்கம் மற்றும் தேசிய அளவிலான வர்த்தகங்கள் முடக்கம் காரணமாக அந்நாடு பொருளாதார நெருக்கடிக்கடியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் பிரிட்டனை மிக அதிக அளவில் பாதிக்கும் நிலை தற்போது உண்டாகி உள்ளது . கிட்டத்தட்ட இங்கிலாந்தில் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர் , அதாவது அங்குள்ள மக்கள் தொகையில் இது கால் பங்கு அளவாகும் அதேபோல் 4.2 மில்லியன் குழந்தைகள் வறுமையில் உள்ளனர் மொத்தத்தில் 30 சதவீதம் மக்கள் ஏழைகளாக உள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்தில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது பிரிட்டனில் ஏராளமானோர் வேலைகளை பறிகொடுத்து ஏழ்மையில் சிக்கித் தவிக்கின்றனர் குறிப்பாக சிறிய உணவகங்கள் சில்லறை வணிகங்கள் மொத்தமாக முடங்கியுள்ளன . அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான மக்கள் குறைந்த அளவிலான ஊதியத்திற்கு பாதுகாப்பற்ற முறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என சமூக மாற்றத்திற்கான அமைப்பான ஜோசப் ரோன்ட்ரீ அறக்கட்டளையின் பொருளாதாரத்தின் தலைவர் டேவ் இன்னெஸ் கூறினார். அவரின் கூற்றுப்படி கடந்த 15 நாட்களில் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கடன் அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது இன்னும் இரண்டு வாரங்களில் 10 மடங்காக அதிகரிக்கும் என கூறப்படுகிறது . கொரோனா பரவலுக்கு முன் ஓரளவுக்கு வருமானம் ஈட்டி வந்த குடும்பங்கள் இப்போது வருமையின் காரணமாக கடன் அட்டைகளைப் பெறுவதின் மூலம் மேலும் வறுமைக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது என இங்கிலாந்தின் குழந்தை வறுமை நடவடிக்கைக் குழுவின் இயக்குனர் லூயிசா மெக்கீஹான் கூறினார்.
அதேபோல் குடும்பங்கள் வறுமையில் வாடி வரும் நிலையில் பள்ளிகளும் மூடப்பட்டதால் குழந்தைகளும் வீட்டில் சிக்கித் தவிக்கின்றனர் இணையம் மூலம் கணினி வசதி இல்லாத குழந்தைகள் இணைய வழி படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது . கொரோனாவால் அதிக வறுமைக்கு உள்ளான குழந்தைகள் நிறைந்த நாடாக இப்போது இங்கிலாந்து மாறியுள்ளது . இளைஞர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் இதுவரை ஏற்படாத ஒரு பெரிய பொருளாதார மந்த நிலையில் இங்கிலாந்தில் ஏற்படப்போகிறதை நாங்கள் உணர்கிறோம் என்கின்றனர். அதுமட்டுமின்றி வீடற்றவர்கள் , மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிக்க உதவும் வங்கிகள் கொரோனா எதிரொலியால் குறைந்த அளவிலேயே நன்கொடைகளை பெறு முடிந்துள்ளது என , சுமார் 1200 உணவு வங்கிகளை கொண்ட தேசிய கிளை அமைப்புகளை கொண்ட டிரஸ்ஸல் டிரஸ்ட் தெரிவித்துள்ளது . ஆனாலும் பள்ளி உணவைப் பெற்று வந்த குழந்தைகளுக்கு மதிய உணவை அரசாங்கம் வழங்கி வருகிறது , அந்தந்த பள்ளிகள் தங்கள் பள்ளி குழந்தைகளை மதிய உணவுக்காக அழைத்துச் செல்கிறார்கள், மதிய உணவை நாங்கள் வழங்கி வருகிறோம் என தேசிய கல்வி ஒன்றியத்தின் தலைவரான ஆசிரியர் அமண்டா மார்ட்டின் கூறியுள்ளார்.