இஸ்ரேல் போர் நடைபெற்று வரும் நிலையில், நாஸ்ட்ரடாமஸ் கணித்த அடுத்த பெரிய விஷயம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
பிரான்ஸ் நாட்டில் 15ஆம் நூற்றாண்டில் யூத குடும்பத்தில் பிறந்தவர் நாஸ்ட்ரடாமஸ். இவரது எதிர்காலம் என்னாவது என்று பெற்றோர்கள் கவலைப்பட்ட நிலையில், உலகத்தின் எதிர்காலத்தையே கணித்தார் நாஸ்ட்ரடாமஸ். உலகம் முடியும் வரைக்குமான தன்னுடைய கணிப்புகளை The Centuries என்ற நூலில் அவர் எழுதியுள்ளார். அவரது கணிப்புகளை நாம் குறிப்பால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
அவரது கணிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பலித்து வருகின்றன. ஹிட்லர் மறைவு, இரட்டை கோபுர தாக்குதல், இந்திரா காந்தி, மகாத்மா காந்தி, இங்கிலாந்து இளவரசி டயானா மறைவு, புவி வெப்பமயமாதல் என பல்வேறு விஷயங்கள் அப்படியே நடந்துள்ளன. அந்த வகையில், 2023ஆம் ஆண்டில் பெரிய போர் நடக்கும் என அவர் கணித்திருந்தார். மூன்றாம் உலகப் போர் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பித்து தொடர்கிறது. அதனைத்தான் நாஸ்ட்ரடாமஸ் கணித்ததாக சிலர் கூறினார்கள். தற்போது, இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் நடந்து வரும் நிலையில், இந்த போர்தான் நாஸ்ட்ரடாமஸ் கணித்தது என சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ, அவர் கணித்தப்படி இந்த ஆண்டு போர் மூண்டுள்ளது.
காசாவில் இருந்து 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு: ஐ.நா. தகவல்!
அதன் தொடர்ச்சியாக, நாஸ்ட்ரடாமஸ் கணித்த அடுத்த பெரிய விஷயம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அரச ராஜ்ஜியத்தின் முடிவுதான் அது. “முதல் கதாபாத்திரத்தின் திடீர் மரணத்தால் அவர் மாற்றப்பட்டு, மற்றொருவர் ராஜ்யத்திற்கு வருவார். ராஜாவாக வருவார் என்று எதிர்பார்க்காத ஒருவர் அரியணை ஏறுவார்.” என நாஸ்ட்ரடாமஸின் குறிப்பு கணித்துள்ளது.
அவரது இந்த கணிப்பு, மோசமான நிகழ்வுகள் அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என்று கூறுவதாக குறிப்பிட்டு காட்டுகிறார்கள். மூன்றாம் சார்லஸ் மன்னருக்குப் பிறகு, பிரிட்டிஷ் கிரீடம் வாரிசு வரிசையைப் பின்பற்றத் தவறிவிடக்கூடும். மேலும் இளவரசர் ஹாரிக்கு அடுத்த மன்னராக வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஏனெனில், எதிர்பாராத ஒருவர் அரியணை ஏறுவார் என நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு கூறுகிறது.
மன்னர் மூன்றாம் சார்லசுக்கு பிறகு, இளவரசர் வில்லியம் வாரிசாக வேண்டும். அவருக்குப் பிறகு, அவரது மூன்று குழந்தைகள் - ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ் வரிசையில் வருகிறார்கள். இதையடுத்து வில்லியமும் சகோதரரும், மன்னர் மூன்றாம் சார்லஸின் இரண்டாவது மகனுமான இளவரசர் ஹாரி நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆனால், நாஸ்ட்ரடாமஸ் கணிப்புப்படி பார்த்தால், எதிர்பாராத ஒருவர் அரியணை ஏறுவார் என்றல, அது ஹாரியாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
இளவரசர் வில்லியமின் குழந்தைகள் எல்லாவற்றையும் அழித்துவிடுவார்களா? இதுதான் நாஸ்ட்ரடாமஸின் அடுத்த கணிப்பு. “கடற்கரைக்கு அருகில், மூன்று அழகான குழந்தைகள் பிறக்கின்றன. வயது வந்தவுடன் மக்களை நாசம் செய்து விடுவார்கள். அவர்கள் ராஜ்யத்தை மாற்றுவார்கள், அது இனி வளர்வதை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.” என்று நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார். இந்த கணிப்பு மன்னர் மூன்றாம் சார்லஸின் அரசாட்சியை உலுக்கக்கூடும். நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ள அந்த மூன்று குழந்தைகள், இளவரசர் வில்லியமின் மூன்று குழந்தைகள் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.