சீனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய வட கொரியா..!! அமெரிக்காவை எச்சரிக்கும் அதிபர் கிம் ஜாங் உன்...!!

By Ezhilarasan Babu  |  First Published May 8, 2020, 3:13 PM IST

கொரோனா வைரசை எதிர்த்து சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளதாக வட கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .


கொரோனா வைரசை எதிர்த்து சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளதாக வட கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது . கொரோனா விவகாரத்தில்  அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சீனாவை மிகக்கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ,  வட கொரிய அதிபர் சீனாவை பாராட்டுவதன் மூலம் தனது ஆதரவு என வெளிபடுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.  கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , லட்சக்கணக்கான மக்கள் நோய்த் தொற்றுக்கு  ஆளாகி கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர் .  இதுவரை மனிதகுலம்  சந்தித்திராத பேரழிவாக இது கருதப்படுகிறது . 

Latest Videos

இந்நிலையில் மற்ற எல்லா நாடுகளையும் விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்  தற்போது சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர் .  இந்த வைரஸ் பரவலுக்கு காரணம் சீனாதான்  திட்டமிட்டே  இந்த வைரஸ் குறித்த தகவல்களை மறைத்து விட்டது ,  உலகத்தில் ஏற்பட்டிருக்கிற இந்த பேரழிவிற்கு சீனா பதில் சொல்லியே ஆகவேண்டும் என எச்சரித்து வருகின்றனர் .  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான்  கொரோனா பரவியது ,  அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் நிறைய உள்ளது .  வைரஸ் விவகாரத்தில் சீனா உண்மையை உலகிற்கு சொல்ல வேண்டும் ,  என மிரட்டும் தொணியில் பேசிவருகிறார் . 

இந்நிலையில் சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிரான எதிர்ப்பு மனநிலை  தீவிரமடைந்து வரும் நிலையில்,  சமீபத்தில் ஒட்டு மொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்த வட கொரிய அதிபர்  கிம் ஜாங் உன் ,  சில வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பொதுவெளியில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். கொரோனா விவகாரத்தில்  சீனாவை ஒட்டுமொத்த உலகமும் எதிர்த்து வரும் நிலையில் அதிபர் கிம் ஜாங் உன் சீன அதிபருக்கு வாய்மொழிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் .  அதில் பெய்ஜிங் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.  இதுவரை உலகம் சந்தித்திராத ஒரு புதிய வகை வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி வாய்ப்பை அதிபர் ஜி ஜின்பிங் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் .  இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . 

இந்த வைரசை ஜி ஜின்பிங் அவர்களின் புத்திசாலித்தனமான வழிகாட்டுதலின் கீழ் எதிர்கொண்டு சீனா வென்றுள்ளது என கிம் ஜாங் உன் வாழ்த்து அனுப்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது ,  ஆனால் சீன அதிபருக்கு  இந்த செய்தியை அவர்  எவ்வாறு அனுப்பினார் என்பதை அந்த ஊடகம் தெரிவிக்கவில்லை ,  அமெரிக்க அதிபர் தொடர்ந்து சீனாவை குற்றம் சாட்டி வரும் நிலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் தற்போது சீனாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி கிம் ஜாங் உன்,  சீனாவுக்கான தனது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.  இது அமெரிக்காவை எச்சரிப்பதற்கான செய்தியும் கூட என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். 

 

click me!