கொரோனாவையே வெறுப்பேற்றும் வட கொரியா...!! எவ்வளவு அடிச்சாலும் வெளியில் சொல்லாமல் கதறும் கிம் ஜாங் உன்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 13, 2020, 11:38 AM IST

அச்சுறுத்தும் பேரழிவாக இது மாறி உள்ளது என அக்கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம்  கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது . 
 


கொரோனா தாக்கம் தங்கள் நாட்டில் எந்த அளவிற்கு உள்ளது என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கரோனா வைரசுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.  மேலும்  இனம் மொழி என பல எல்லைகளை கடந்து மனிதகுலத்தை அச்சுறுத்தும் ஒரு பேரழிவு இது என அவர் கூறியுள்ளதாக  வட கொரிய அரசு  நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது .  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  210 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் ஊடுருவி பெரும் மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது இதுவரை 18,53,173 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,248 ஐ தாண்டியுள்ளது ,  இத்தாலி ,  ஸ்பெயின் அமெரிக்கா , பிரான்ஸ் , ஜெர்மனி , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  ஜப்பான் ,  ரஷ்யா ஐக்கிய நாடுகள் ஓரளவுக்கு கொரோனா  தாக்கத்திலிருந்து தப்பித்து வந்த நிலையில் ,  தற்போது அந்நாடுகளிலும் கொரோனா தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.  

Latest Videos

ஆக ,  ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒரே புள்ளியில் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் ,  வடகொரியா மட்டும் முற்றிலும் மாறுபட்டுள்ளது ,  இதுவரையில் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி உள்ளது ,  அதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை வெளிப்படையாக கூற மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி தங்களது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கமே இல்லை அது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது  என அந்நாட்டின்  அதிபர் முதல்  அதிகாரிகள் வரை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  ஆனாலும் பல்வேறு உலக நாடுகள் வடகொரியா உண்மையை மறைக்கிறது , கிம் ஜாங் உன் கூறும் தகவல்களை  ஏற்றுக்கொள்ள முடியாது என விமர்சித்து வருகின்றனர் .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள வடகொரியா சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஜனவரி மாதம் முதலே தங்கள் நாட்டு  எல்லைகளை மூடியது ,  பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததுடன் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய ஆயிரக்கணக்கான வடகொரிய மக்களையும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரையும் , வெளிநாடுகளில்  இருந்து திரும்பிய தூதர்களையும் தனிமைப்படுத்தி எடுத்த நடவடிக்கை மூலமாக  வைரஸ் கிருமியை துடைத்தெரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நிலவரப்படி, வட கொரியாவில் ,  11 வெளிநாட்டினர் மற்றும் 698 உள்நாட்டு பிரஜைகள் என 709 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் ,  சுமார் 24 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் மூலம் வடகொரியா புள்ளிவிவரம் தெரிவித்திருந்தது ,  ஆனால் வட கொரியா இதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை ,  இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில்,  வட கொரிய தலைநகர்  பியோங்யாங்கில், கொரோனா வைரஸை கட்டுபடுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த்தாக செய்தி வெளியாகி உள்ளது  நாட்டில்  வேகமாக பரவி வரும் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அப்போது அதிபர் , அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதற்கு   ஒத்துழைக்க நாட்டு மக்களை அவர் அழைத்ததாக அந்நாட்டின் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
 நாட்டின் எல்லைகளை கடந்து கண்டங்களை தாண்டி ஒட்டு மொத்த மனித குலத்தையும்  அச்சுறுத்தும் பேரழிவாக இது மாறி உள்ளது என அக்கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம்  கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது .

 

 இத்தகைய சூழல் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகளை உருவாக்கும் எனவே வைரஸின் பரவலை  கட்டுபடுத்த முழுமையான சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தொற்றுநோயை சமாளிக்கவும்,  நாட்டு மக்களின் வாழ்க்கையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது.  இன்னும் பல தீவிரமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்  என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.   இத்தனை நாட்களாக கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என வடகொரோயா கூறி வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸை கட்டுபடுத்தும்  நடவடிக்கையை  தீவிரப்படுத்த வேண்டுமென கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தி இருப்பது வடகொரியாவில் கொரோனா தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறது என்பதை உறுதி படுத்துவதாக உள்ளது.  பலவீனமான சுகாதார கட்டமைப்பை கொண்ட வடகொரியா வைரசால் கடுமையாக பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுகாதாரத்துறை வல்லுனர்கள் கணித்துள்ளது குறிப்பிடதக்கது.  
 

click me!