அதிரவைக்கும் வடகொரிய அதிபரின் அந்தரங்கம்...!! ஆட்சியைக் கைப்பற்ற காத்திருக்கும் அழகிய சிங்கப் பெண்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published May 11, 2020, 9:55 AM IST
Highlights

38 வயதான சர்வாதிகாரியின் வாழ்க்கை மூன்று  பெண்களைச் சுற்றியே அமைந்துள்ளது என்பதை கேட்க சற்று ஆச்சர்யமாகத்தான் இருக்கும் ,  ஆனால் அது தான் உண்மை...

அதிபர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று மக்களை எந்த அளவிற்கு அவர்   யூகிக்க வைக்கிறாரோ அதே அளவுக்கு ,  " அந்த ஏவுகணை மனிதர் " தனது வாழ்க்கையில் இடம்பிடித்துள்ள  வித்தியாசமான பெண்கள் மூலம் அரசியல் ஆய்வாளர்களையும் குழப்புகிறார் என  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றியும் அவரைச்சுற்றி வலம் வரும் அந்த முக்கிய மூன்று பெண்கள் பற்றியும் நியூயார்க் போஸ்ட் இப்படி விவரிக்கிறது... சமீபத்தில் கிம் பற்றி பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில்  கிம்மிற்கு பின்னால் யார்  ஆட்சிக்கு வரக்கூடிய தகுதி பெற்றுள்ளனர் என்பது குறித்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ள அந்த ஆங்கில நாளேடு  கிம்மின்  வாழ்க்கையில் நீக்கமற இடம்பெற்றுள்ள அழகும் சௌந்தர்யமும் நிறைந்த அந்த மூன்று பெண்களுக்கே அதிக வாய்ப்பு  உள்ளது என அனுமானித்துள்ளது,   அமெரிக்காவையே ஆட்டம் காண வைக்கும் அந்த 38 வயதான சர்வாதிகாரியின் வாழ்க்கை மூன்று  பெண்களைச் சுற்றியே அமைந்துள்ளது என்பதை கேட்க சற்று ஆச்சர்யமாகத்தான் இருக்கும் ,  ஆனால் அது தான் உண்மை... 

அதில் ஒருவர் முன்னாள் பாப் நட்சத்திரமும் கிம்மின்  மனைவியுமான ரி-சோல் - ஜூ ஆவார் ஆனால் சமீபத்திய வாரங்களில்  வடகொரியாவின் அனைத்து அம்சங்களையும் இயக்கும் வடக்கின் சக்திவாய்ந்த அமைப்பு மற்றும் வழிகாட்டல் துறையின் தற்போதைய தலைவராக கிம்மின் தங்கையே உள்ளார் எனவும் அவரே அதி செல்வாக்கு பெற்றவராக உள்ளார் எனவும்  ஊடகங்கள் கணித்துள்ளன .  கிம் ஒருவேளை இறந்துவிட்டாலோ அல்லது ஆளமுடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டலோ அவருக்குப்பின் அவரது தங்கை " கிம் யோ ஜாங்" வருவார் என தகவல்கள் கூறுகின்றன ,  ஆனால் அவரன் மனைவி  " ரி-சோல்-ஜூ "  கிம்மின் தந்தை மற்றும் அவரின்  தாத்தாவின் மனைவிகளை காட்டிலும் பொது நிகழ்ச்சிகளில் கிம்முடன்  கைக்கோர்த்து உலா வரும் பதுமையாக காட்சி தருகிறார்,  கிம் குடும்பத்தில் மற்றவர்களைவிட அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர் . கிம் ,  ரி-சோல்-ஜூ  திருமணம் வடகொரியாவில் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட திருமணம் என்றும்  இவருக்கு  மூன்று குழந்தைகள் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது ,  உண்மையில், அமெரிக்க முன்னாள் சிஐஏ ஆய்வாளர் ஜங் எச். பாக்  அவர்கள் வடகொரியா பற்றி  எழுதிய புத்தகத்தில், கிம் தன்னை ஒரு கொரிய ஜான் எஃப். கென்னடி என்றும் மற்றும் அவரது மனைவியை ஒரு நாகரீகமான அல்லது ஒரு மார்டனான ஜாக்கியாகவே பார்க்கிறார் எனவும் கூறுகிறார்.

கிம்மின்  மனைவி  ஒரு திறமையான அரசியல்வாதி என்றோ அவருக்கு பெரிய அரசியல் லட்சியம் இருப்பதாகவோ தெரியவில்லை ,  ஆனால் அவருக்கு மேல்தட்டு மக்களிடத்தில் மதிப்பும் மரியாதையும்  உள்ளது என பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் வட கொரிய ஆய்வாளருமான புரூஸ் பெக்டோல் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். " கிம்மின் மனைவி முற்றிலும் அழகானவர் அவர் மிக அழகாக இருக்கிறார் .  - கிம் -  மிற்கு ஏதாவது நடந்தால் கூட அவரும் குழந்தைகளும் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் ,  கிம்மின் மாமா கொல்லப்பட்டது போல அவர் கொல்லப்பட மாட்டார் புதிதாக ஒருவர் ஆட்சியை பிடித்தாலும்  அவர்கள் அவரை நாட்டை விட்டு வெளியேற்றலாம் அவ்வளவுதான்,  ஆனால் அந்த அளவிற்கு அவரது நிலைக்கு மோசமாகாது  என மனைவி " ரி-சோல்-ஜூ குறித்து  தகவல்கள் சொல்லப்படுகின்றன

ஆனால்  மனைவி மற்றும் சகோதரியின் பாத்திரங்களுக்கு மிகவும் சவால் கொடுப்பவராக இருப்பவர் "ஹியோன் சாங்-வோல் " தோராயமாக 43   வயதுடைய இந்த பெண்ணை   பொதுவாக வட கொரியர்கள் " பிக் சிஸ்டர் வைஃப் "   என அழைக்கின்றனர் ,  இவர்  வடகொரியாவின் சர்ச்சைக்குரிய நபராகவே கருதப்படுகிறார் ,  இவர்  ஆபாச வீடியோக்கள் சம்பந்தமான குற்றச்சாட்டு ஒன்றில் அவரது குழுவினருடன் 2013ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார் என்று கொரியாவில் பரபரப்பாக பேசப்பட்டது  -கிம் - மின்  மரணத்தைப் போலவே வடகொரியாவில் இவரது மரணம் குறித்து பெரிய அளவில்  மிகைப் படுத்தப்பட்டது  (வட கொரியாவில் ஆட்சியைப் பற்றிய  வதந்திகளும் தவறான தகவல்களும் சாதாரணமான ஒன்றுதான்)  ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கி அவர் மீண்டும்  பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், இப்போது  இவர் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் கிம்மின் ஒரு முக்கிய உதவியாளராக இருந்துவருகிறார்,  கிம் கலந்துகொள்ளும் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நபராக இருக்கிறார் ஹியோன் சாங்-வோல் ,  கிம்மின் சகோதரி கொடுக்கும் முக்கிய வேலைகளையும் செய்து முடிக்கிறார் , 

கிம்  ஹியோன் பற்றி  இன்னும் கூட பல்வேறுவிதமான  யூகங்களும் வதந்திகளும்   வடகொரியாவில் அடிபடுகிறது ,  அதாவது  அந்த ரகசியத்தை யார் இடத்திலிருந்து கேட்கிறோமோ அதைப் பொறுத்து அந்த தகவல்கள் மாறுபடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ,   ஹியோன்  தனது இளமைப்பருவம் முதல் கிம்மின்  பழைய நண்பர் என்றும், மறைந்த கிம்மின் தந்தை கிம்-ஜாங்-இல்லின் கடைசி காதலி எனவும்,  சிலர் கிம்மின் ரகசிய காதலி தான் ஹியோன்  எனவும் இவரைப் பற்றி பல செய்திகள் உலா வருகின்றன . ஆனால் சில ஊடக செய்திகள் கிம் தனது பதின் பருவத்தில் இருந்து ஹியோனுடன் ரகசிய உறவில்  இருந்து வந்தார் என்றும் இடையில் அவரது தந்தை  கிம் -ஜாங் -இல் கண்டித்ததை அடுத்து அவரைவிட்டு விலகிய கிம் ,  தந்தையின் மறைவுக்கும் பின் மீண்டும் ஹியோன் வுடனான  உறவை புதுப்பித்துக்கொண்டார்  எனவும் கூறப்படுகிறது.   கடந்த 2018ம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த ஒலிம்பிக் நிகழ்ச்சியில் வடகொரியா சார்பில் அனுப்பப்பட்ட உயர் மட்ட தூதுக்குழுவில் அங்கமாக கிம்மின் சகோதரியுடன் ஹியோன்  கலந்துகொண்டார் எனவும் ,   ஹியோன் அந்த அளவிற்கு  மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக தன்னைநிரூபித்திருக்கிறார் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 

இது அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில்  நிச்சயமாக மனைவியைவிட ஹியோன்   சக்தி வாய்ந்தவர் ஆனால் இன்னும் சகோதரியை விட சக்தி வாய்ந்தவராக அவர் மாறவில்லை என்கின்றனர்.  அதே நேரத்தில்  கிம்மின் மனைவி விட அவரது சகோதரியை விட கிம் இறக்க நேரிட்டால் அல்லது அதிகாரத்தை இழந்தால் அதிகம்  பாதிக்கக் கூடியவர்  ஹியோனாகத்தான் இருக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . இதுகுறித்து தெரிவிக்கும் வட கொரியாவை மையமாகக் கொண்ட உளவு அமைப்பான என்.கே. லீடர்ஷிப் வாட்சின் இயக்குநரும் நிறுவனருமான மைக்கேல் மேடன் எத்தனை பெண்கள் கிம்மைச் சுற்றி இருந்தாலும்  மற்றவர்களைவிட  கிம் தன் மனைவியை அதிகம் நேசிக்கிறார் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

click me!