கிம் ஜாங் உன் நாட்டில் தலைவிரித்தாடும் புதிய பிரச்சனை.. சோகத்தில் வடகொரியா மக்கள்!

By Kalai Selvi  |  First Published Nov 28, 2023, 1:22 PM IST

நீங்கள் மட்டுமல்ல வடகொரிய மக்களும் இப்போது முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்கிறார்கள். வழுக்கை தலையுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.  


வடகொரியாவின் உச்ச தலைவர் கிம் ஜாங் உன், தனது வாழ்க்கை முறையால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர். இப்போது கிம் ஜாங் உன்னுக்கு பதிலாக வடகொரியா மக்கள் விவாதத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தற்போது ஒரு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். அதுதான் முடி உதிர்தல். வடகொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்கிறதாம். அதனால் அவர்களின் தலை சீக்கிரமே வழுக்கையாகிவிடும் என்ற அபாயம் உள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த வல்லுநர்கள், வட கொரிய மக்களின் இந்த பிரச்சனையை அனைவருக்கும் முன் வைத்துள்ளனர். வட கொரியாவில் முடி உதிர்தல் அல்லது வழுக்கையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் விசித்திரமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தென் கொரிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, முடி உதிர்தல் தொற்றுநோய் வட கொரியாவில் வேகமாக பரவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் வட கொரியாவில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் சலவை சோப்புகள் என்று நிபுணர்கள் குற்றம் சாட்டினர். வடகொரியர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விரைவான முடி உதிர்வு ஏற்படுகிறது.  

இதையும் படிங்க:  கிம்-ஜாங் உன்-ன் ஆடம்பர ரயிலில் இத்தனை வசதிகளா? புடினின் சொகுசு ரயிலில் கூட இந்த வசதிகள் இல்லையாம்

இந்த தீவிரமான விஷயத்தைப் பற்றி மருத்துவர் சோய் ஜியோங் ஹூன் பேசினார். சோய் ஜியோங் ஹூன் ஒரு வட கொரிய மருத்துவர், அவர் இப்போது தெற்கே ஓடிவிட்டார். சியோலில் உள்ள கொரியா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். 

இதையும் படிங்க:  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை

வடகொரியா மக்களைப் பற்றி பேசிய அவர், வடகொரியாவில் குறைவான ரசாயனங்கள் பயன்படுத்தும் பொருட்கள் கிடைப்பதில்லை. மென்மையான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது அங்குள்ளவர்கள் சொல்வது போல் எளிதானது அல்ல. அங்குள்ள பெரும்பாலானோர் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஆனால் அங்குள்ளவர்கள் தலைமுடி உதிர்வதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. முடி உதிர்தல் மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகளை சமாளிக்க மனதளவில் தயாராக இருப்பதாக மருத்துவர் சோய் ஜியோங் ஹூன் தெரிவித்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இங்கு மிகச் சிலரே முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஏனெனில் இங்கு சிகிச்சை செலவு அதிகம். மேலும் முடி உதிர்தலுக்கு மற்றொரு காரணம், வட கொரிய இராணுவ தொப்பி. இந்த தொப்பியால் சரியான காற்று முடிக்கு செல்வதில்லை. இது பாக்டீரியாக்கள் குவிந்து துளைகளை அடைத்துவிடும். இதனால் தான் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு முடி அதிகம் உதிர்கிறது என்கின்றனர் நிபுணர்கள். 

வடகொரியாவில் ராணுவம் தொடர்பாக கடுமையான விதிமுறை உள்ளது. அனைத்து உடல் திறன் கொண்ட ஆண்களும் பொதுவாக ஆயுதப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்னை அதிகமாக உள்ளது. தற்போது வடகொரியாவில் மட்டுமின்றி தென்கொரியாவிலும் திடீரென முடி உதிர்வது அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

click me!