மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா! உலகை மிரட்டும் வடகொரியாவை என்ன செய்வது? ஐநா பாதுகாப்பு சபையில் முடிவு..!

 
Published : Sep 15, 2017, 09:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா! உலகை மிரட்டும் வடகொரியாவை என்ன செய்வது? ஐநா பாதுகாப்பு சபையில் முடிவு..!

சுருக்கம்

North Korea launches rocket launchers What to do with North Korea? UN Security Council decision

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இம்மாதத்தில் இரண்டாவது முறையாக ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைச் சோதனைகளையும் அணுகுண்டு சோதனைகளையும் நடத்திவருகிறது. வடகொரியாவை கண்டிக்கும் விதமாக ஐநா பாதுகாப்பு சபை பலமுறை பலவிதமான பொருளாதார தடைகளை வடகொரியா மீது விதித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டு வரும் வடகொரியா உலகநாடுகளிலிருந்து தனித்து விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சாகடிப்போம்; ஜப்பானை மூழ்கடிப்போம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஜப்பானை நோக்கி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இது இரண்டாவது ஏவுகணை சோதனை ஆகும்.

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதை ஜப்பானும் தென்கொரியாவும் உறுதி செய்துள்ளன. வடகொரியாவிற்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.

இதையடுத்து ஐநா பாதுகாப்பு சபை, இன்று அவசரக் கூட்டத்தை கூட்டுகிறது. அந்த கூட்டத்தில் வடகொரியா மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு ஜாக்பாட்! டிட்வா புயல் நிவாரணமாக ரூ.3,700 கோடி நிதியுதவி.. இந்தியா அதிரடி அறிவிப்பு!
வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!