புளோரிடாவைப் புரட்டிப் போட்ட இர்மா புயல் … இந்தியர்கனை மீட்க களமிறங்கியது தூதரகம்….

irma strom hit florida district
irma strom hit  florida district


அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த இர்மா புயல் 130 மைல் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

irma strom hit  florida district
மேற்கு ஆப்பிரிக்காவில் உதயமான காற்று மெல்ல இர்மா புயலாக மாறி கரீபியன் தீவுகளில் கோரதாண்டவம் ஆடியது. தற்போது இர்மா புயல் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

Latest Videos

அந்த பிராந்தியத்தின் முக்கிய நகரமான மியாமி பகுதியில் மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. மழை கொட்டித்தீர்த்தது. கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன.

புயல் எச்சரிக்கை காரணமாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

புளோரிடாவை தாக்கிய இர்மா புயல் படிப்படியாக நகர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மகாணங்களை அடுத்த வாரம் தாக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

தொடர்ந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இர்மா புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படி அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்களை தொடங்கி உள்ளது. இந்தியர்களுக்கு உதவும் வகையில் ஹாட் லைன் எண் 202 258 8819 அறிவிக்கப்பட்டுள்ளது.

 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image