உலக நாடுகளை அலறவிட்ட வட கொரியா..!! அமெரிக்காவை குறிவைத்து அழிக்கும் ஏவுகணையை காட்டி மிரட்டல்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 12, 2020, 5:40 PM IST

இது ஏற்கனவே வட கொரியாவில் உள்ள ஹ்வாசோங் - 15  ஏவுகணையை விட நீளமானது, ஹ்வாசோங்  ஏவுகணை 12,874 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. இது அமெரிக்காவில் எந்தப் பகுதியையும் தாக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும்.


கம்யூனிச நாடான வடகொரியாவில் தொழிலாளர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் அங்கு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதில் வட கொரியாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவின் எந்த ஒரு பகுதியையும் தாக்கக்கூடிய வகையில் ஆற்றல் பெற்ற பாலிஸ்டிக்  ஏவுகணை அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது. இது ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயுக் கூடிய திரவ ஏவுகணையான இது ரேடார் மற்றும் உளவு செயற்கைக்கோள்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஊடுருவிச் சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.. எனவே  இந்த அணிவகுப்புக்கு பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

Tap to resize

Latest Videos

வட கொரிய தலைநகர் பியோயாங்கில் ஆளும் தொழிலாளர் கட்சியில் 75வது ஆண்டு விழா நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் வரை நீடித்தது. உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த அணிவகுப்பில் ஏராளமான ஆயுதங்கள் இடம்பெற்றிருந்தன, அதில் மிக முக்கியமானது ராட்சத ட்ரக்கில் வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட மிகப்பிரம்மாண்டமான கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் எனப்படும் ஏவுகணை அணிவகுப்பில் இடம்பெற்றது. அதாவது டிரான்ஸ்போர்ட்டர் எரேக்டர் லாஞ்சர் (டெல்) அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே வட கொரியாவில் உள்ள ஹ்வாசோங் - 15 ஏவுகணையை விட நீளமானது, ஹ்வாசோங்  ஏவுகணை 12,874 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. இது அமெரிக்காவில் எந்தப் பகுதியையும் தாக்கக் கூடிய ஆற்றல் கொண்டதாகும். 

இந்த ராணுவ அணிவகுப்பு 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சனிக்கிழமை நடைபெற்றது. நீர்மூழ்கி கப்பல் ஏவுகணைகளையும் வடகொரியா அறிமுகப்படுத்தியது. அதன் பெயர் புகுகாசோங் - 4  ஏற்கனவே நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விட அதிக தூரத்தை இலக்காக கொண்டு தாக்கும் ஆற்றல் கொண்டது. அணிவகுப்பில் ரஷ்யாவின் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குறுகிய தூர ஏவுகணை, இஸ்காண்டர் மற்றும் பல ராக்கெட் ஏவுகணைகளையும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் உரையாடிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், எந்த ஒரு போரையும் தவிர்க்க நாங்கள் தொடர்ந்து எங்கள் பலத்தை  அதிகரிப்போம், இந்த ஆயுதங்கள் எங்களது பாதுகாப்புக்காக மட்டுமே, நாங்கள் அதை ஒருபோதும் தவறாக அல்லது தேவையற்ற முறையில் பயன்படுத்த மாட்டோம். இருப்பினும் ஒரு ராணுவம் எங்கள் மீது அதிகாரத்தை காட்ட முயன்றால் நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம், எங்கள் முழு பலத்தோடு அவர்களை தாக்குவோம் என கூறினார்.
 

click me!