மீண்டும் 600 பலூன்களில் குப்பையை அனுப்பிய வடகொரியா! தென் கொரியா கடும் கண்டனம்!

By SG Balan  |  First Published Jun 2, 2024, 4:36 PM IST

சிகரெட் துண்டுகள், துணி, காகிதக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் நிரப்பப்பட்ட 600 பலூன்களை வட கொரியா தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ளது.


வட கொரியா மீண்டும் குப்பைகள் நிரப்பிய பலூன்களை தங்கள் நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

தென் கொரியாவின் கூற்றுப்படி, சிகரெட் துண்டுகள், துணி, காகிதக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் நிரப்பப்பட்ட 600 பலூன்களை வட கொரியா அனுப்பியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி முதல் காலை 10 மணி வரை இந்தக் குப்பை பலூன்கள் தென் கொரிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

பலூன்கள் சரியாக எங்கிருந்து அனுப்பப்பட்ட என உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தீவிர வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் தென்கொரிய ராணுவம் சொல்கிறது. எல்லைப் பகுதியில் வட கொரிய எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை  விநியோகிப்பதற்கு பதிலடியாக இந்த குப்பை பலூன்கள் அனுப்பப்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கனடாவில் சீரியல் கில்லர் ராபர்ட் பிக்டன் அடித்துக்கொலை! 49 பெண்களைக் கொன்று பன்றிகளுக்கு இரையாக்கியவர்!

இந்த சம்பவம், வட கொரியாவின் இதேபோன்ற சமீபத்திய நடவடிக்கையின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு முன் "உண்மையின் பரிசுகள்" என்று முத்திரை குத்தி, நூற்றுக்கணக்கான ராட்சத பலூன்களில் குப்பைகள் மற்றும் மனிதக் கழிவை நிரப்பி அவற்றை தென்கொரியாவுக்கு அனுப்பியது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்த தென் கொரிய அரசு, இது ஆத்திரமூட்டும் ஆபத்தான செயல் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இரண்டாவது முறையாக வட கொரியா தனது அழிச்சாட்டியத்தைத் தொடர்கிறது.

மூக்கால் டைப்பிங்! வேற லெவல் டேலண்ட்! 3வது முறை கின்னஸ் உலக சாதனை படைத்த இந்தியர்!

click me!