பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது ஆதார் போன்ற அற்புதமான திட்டத்தை பற்றியும், நகரமயமாக்கல் குறித்த அவரின் கருத்தையும் கேட்டறிந்ததாக பால் ரோமர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சிறப்பித்துள்ளார். இந்த அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு முக்கிய பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரயாடி இருக்கிறார் பிரதமர் மோடி அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற பால் ரோமர் பிரதமர் மோடியை சந்தித்து, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது மோடியுடன் ஆதார் போன்ற அற்புதமான திட்டத்தை பற்றியும், நகரமயமாக்கல் குறித்த அவரின் கருத்தையும் கேட்டறிந்ததாக பால் ரோமர் கூறியுள்ளார்.
ஆதார் போன்ற திட்டங்களின் மூலம் உலகிற்கு இந்தியா வழி காட்டியாக இருக்க முடியும் என்று பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் நோபல் பரிசு பெற்ற பால் ரோமர் தெரிவித்துள்ளார். pic.twitter.com/sHt9xwqPqE
— Asianetnews Tamil (@AsianetNewsTM)பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பின் அவர் கூறியதாவது : “நான் எதையாவது கற்றுக்கொண்டால் அதை நல்ல நாளாக கருதுவேன், குறிப்பாக இந்தியா என்ன செய்கிறது என நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஆதார் போன்ற திட்டங்களின் மூலம் உலகிற்கு இந்தியா வழி காட்டியாக இருக்க முடியும். நகரமயமாக்கல் ஒரு பிரச்சனை அல்ல, இது ஒரு வாய்ப்பு என்பதை பிரதமர் மிக சிறப்பாக வெளிப்படுத்தினார். இதை ஒரு கோஷமாக எடுத்துக்கொள்கிறேன் என பால் ரோமர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 'நான் மோடி ரசிகன்..' பிரதமர் மோடியை புகழ்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்