பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் கூறுகையில், இது அற்புதமான உரையாடல். அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்தார். அப்போது எலான் மஸ்க், அடுத்த வருடம் இந்தியாவிற்கு வர உள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் கூறுகையில், இது அற்புதமான உரையாடல் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், “உலகின் வேறு எந்த பெரிய நாட்டையும் விட இந்தியாவுக்கு அதிக ஆற்றல் உள்ளது. இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்யத் தூண்டும் பிரதமர் மோடி இந்தியா மீது உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார். நான் மோடி ரசிகன். இது ஒரு சிறந்த சந்திப்பு, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்” என்று கூறினார்.
நான் பிரதமர் மோடியின் ரசிகர். சூரிய சக்தி முதலீட்டில் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். pic.twitter.com/TxHGl9cU7n
— Asianetnews Tamil (@AsianetNewsTM)முன்னதாக 2015 ஆம் ஆண்டு, கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி வருகை தந்த போது, எலான் மஸ்க் சந்தித்தார். அப்போது மஸ்க்கிடம் ட்விட்டர் இல்லை. டெஸ்லா தனது இந்திய தொழிற்சாலையை அமைப்பதற்கான இடத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி செய்யும் என்று எலான் மஸ்க் கூறினார்.