ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் - இந்திய ஊழியர்களுக்கு ‘எச்.1 பி ’ விசா ரத்து

Asianet News Tamil  
Published : Mar 04, 2017, 05:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் - இந்திய ஊழியர்களுக்கு ‘எச்.1 பி ’ விசா ரத்து

சுருக்கம்

If these orders the Indians living in the USbut also in India were shocked

இந்திய சாப்ட்வேர், மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவற்றில் வழங்கப்படும் எச்.1.பி. விசாவைஏப்ரல் 3ந்தேதியில் இருந்து தற்காலிகமாக அடுத்த 6 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அரசு நேற்று திடீரென அறிவித்தது. 

இந்த உத்தரவால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வசிக்கும்சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்தல் வாக்குறுதி

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை இந்தியர்கள், சீனர்கள் பறிப்பதாக தேர்தல் நேரத்தில்டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பு  ஏற்றால், அமெரிக்கர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பேன். மற்ற நாட்டவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவேன் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

முதல் ‘செக்’

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் எச்1பி விசாக்களை வழங்குவதை கட்டுப்படுத்த வகை செய்யப்பட்டது. இந்த விசாவை பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பளத்தை 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சத்து 40 ஆயிரம்) இரு மடங்காக உயர்த்துவதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன் இது 60 ஆயிரம் டாலராக இருந்தது.

இந்த மசோதாவால்  குறைந்த சம்பளத்திற்காக இந்தியா உள்ளிட்ட பிறநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்த முடியாமல், அவர்களை வெளியேற்றும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது.  

நெருக்கடி

அமெரிக்காவின் சாப்ட்வேர் துறையில் ஏறக்குறைய 60 சதவீதத்துக்கு மேல் இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார். அவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறதே என்ற எண்ணத்தில் ஐ.டி. துறைகளுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார். 

திடீர் உத்தரவு

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இடி தாக்குவது போல் எச்.1பி விசா வழங்குவதையே நிறுத்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

6 மாதங்களுக்கு

2017ம் ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனைத்து வகையான எச்.-1பி விசா தொடர்பான விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இந்த தடை அடுத்த 6 மாதங்களுக்கு இருக்கும். இந்த தடை காலத்தில் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் படிவம்1-907,பிரிமியம் செயல்பாட்டு சேவை படிவம் 1-129 ஆகியவற்றை தாக்கல் செய்ய முடியாது.  இந்ததற்காலித் தடை எப்போது நீக்கப்படும் என்பது குறித்து பின்னால் அறிவிப்பு செய்யப்படும்.

தள்ளுபடி

இந்த தற்காலிகத் தடை என்பது, எச்-1பி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், அல்லது ஏப்ரல் 3-ந்தேதிக்கு பின் தாக்கல் செய்யப்பட்டாலும் பொருந்தும்.  இந்த உத்தரவு 2018ம் ஆண்டு செல்வதற்காக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் எச்1பி விசாவுக்கும் பொருந்தும்.

பிரிமியன் செயல்பாட்டு முறை நிறுத்தப்பட்டு இருப்பதால், எந்தவிதமான எச்1பி விசாக்களையும்தள்ளுபடி செய்ய முடியும்.
படிவம்1-907, பிரிமியம் செயல்பாட்டு சேவை படிவம் 1-129 என இரு பிரிவுகளில் தாக்கல் செய்து இருந்தாலும் அதையும் ரத்து செய்ய முடியும்.

கடிதம்

பிரிமியம் செயல்பட்டு முறை ரத்து செய்யப்பட்டு இருப்பதால், எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தங்களின் விசாவை துரிதப்படுத்த வேண்டுகோள் கடிதம் அளிக்க வேண்டும். அந்த கடித்ததின் அடிப்படையில், படிப்படியாக ஒவ்வொரு கடிதத்தின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பலூசிஸ்தானை பாகிஸ்தானிடம் இருந்து உடைத்த இந்தியா..! தப்பிக்க அசீம் முனீரின் மிருக்கத்தன உத்தி..!
இந்தியாவுல இல்லப்பா.. துபாய்ல இருக்கேன்! ஓஸ்மான் ஹாதி கொலைக் குற்றவாளி வெளியிட்ட வீடியோவால் போலீஸ் அதிர்ச்சி!