
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்த விசாரணையில் இருந்து அரசு தலைமை வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸ் திடீரென விலகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை வீழ்த்தி அரியனையில் அமர்ந்தார். ஆனால் இந்த வெற்றியின் பின்னணியில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தேர்தலுக்கு முன்பாகவே சர்ச்சைகள் வெடித்தன.
இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுக்க உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் அமெரிக்கவாவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட், தேர்தலுக்கு முன்பாக அரசு தலைமை வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸ் ரஷ்ய தூதர் ஜெர்ஜியை இரண்டு முறை சந்தித்து பேசியதாக திரி கொளுத்தி போட்டுள்ளது.
ஆனால் இதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த ஜெஃப் செஷன்ஸ் ரஷ்ய தூதர் உடனான சந்திப்பு தேர்தல் தொடர்பானது அல்ல என்று விளக்கம் அளித்த நிலையில், இவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
விசாரணையில் இருந்து ஜெஃப் செஷன்ஸ் பாதியிலேயே விலகியிருப்பது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....