ஓடும் ரயிலில் தாக்கப்பட்ட இந்திய பெண் - அமெரிக்காவில் தலைவிரித்தாடும் இனவெறி

First Published Mar 3, 2017, 1:46 PM IST
Highlights
Undecided American Indian in New York City woman who brought the racist attack


அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  ஓடும் ரயிலில் இந்திய பெண் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றி வரும் ஏக்தா தேசாய் ன்ற பெண் கடந்த 22 ஆம் தேதி பணி முடிந்து ரயிலில் வீடு திரும்பிய கொண்டிருந்தபோது, அமெரிக்கர் ஒருவர் தன்னை இந்தியப்பெண் என தெரிந்து தகாத வார்த்தைகளை  பேசி இனவெறியுடன் துன்புறுத்தியுள்ளார்.

அந்த இனவெறி அமெரிக்கர்  தன்னை துன்புறுத்தியபோது அவனது நடத்தையை தனது செல்போனில் ஏக்தா பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ பதிவை ஏக்தா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஏக்தா தேசாய் போலீஸில் புகார் அளிக்கப்போவதாக அந்த அமெரிக்கரிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து அந்த மனிதன் சத்தம் போட்டு கொண்டே தான் வீடியோ எடுப்பதை தடுக்க முயற்சித்ததாக ஏக்மத குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோரில் ஒருவர் கூட உதவி செய்ய முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து போலீஸ், மெட்ரோ அதிகாரிகளை தேசாய் தொடர்பு கொண்டும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வேதனை அளிப்பதாக  ஏக்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான் விடுதியில், ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர், 51 வயது அமெரிக்கரான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தொடரும் இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

click me!