
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஒரு வாரத்துக்கும் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றிய டிரம்ப், அமெரிக்காவில் பிளவு ஏற்படுத்த நினைக்கும் சக்திகளின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் பொறியாளராக பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் அளித்துள்ள அவசர கோரிக்கை மனுவில் இந்த கொலை சம்பவம் குறித்து விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றிய டிரம்ப், அமெரிக்காவில் பிளவு ஏற்படுத்த நினைக்கும் சக்திகளின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த டிரம்ப், குடிமக்கள் மீதான தாக்குதலை தடுக்க தனிக்குழு அமைக்க நிதித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.