
கவுரவம் மிக்க ஆஸ்கார் விருதை வென்ற உலகின் முதல் முஸ்லிம் நடிகர் என்ற பெருமையை மெஹர்ஷாலா அலி பெற்றார்.
இவர் மூன் லைட் படத்தில் நடித்தபோது, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா ஒக்லாந்தைச் சேர்ந்த மெஹர்ஷாலா அலிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முதல் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த அவருக்கு ஆஸ்கார் விருது இரண்டாவது ஜாக்பாட்டாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 89 ஆண்டு கால ஆஸ்கார் வரலாற்றில் இதுவரை எந்த முஸ்லிம் நடிகரும் ஆஸ்கார் விருதை வென்றதில்லை என்ற வரலாறு இருந்தது. அதை மாற்றியுள்ளார் மெஹர்ஷா அலி.
மூன் லைட் படத்தில் கியூபாவில் பிறந்து போதை மருந்து கடத்துபவராக நடித்துள்ள மெஹார்ஷா அலி, மியாமி நகரில் வசித்து வருவார். பரிந்த தனது சகோதரருடன் எப்படி சேர்கிறார் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.
இது குறித்து மெஹார்ஷாலா அலி கூறுகையில், "என்னைஇந்த அளவுக்கு உயர்த்திய எனது மனைவிக்கு முதலில் நன்றியை தெரிவிக்கிறேன் "என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மெஹர்ஷாலி அலியின் மனைவி அழகிய பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அதை இன்ஸ்டாகிராமிலும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். அடுத்த சில நாட்களில் அவருக்கு ஆஸ்கார் ஜாக்பாட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.