"மூன் லைட்" படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது - தவறுதலாக அறிவிக்கப்பட்டது "லா லா லாண்ட்"

First Published Feb 27, 2017, 4:22 PM IST
Highlights
La La Land movies just as the announcement of the award for Best Picture and then transformed Moon Light movie was announced. This was the biggest mistake in the history of the Oscars ceremony


89ம் ஆண்டு ஆஸ்கார்  விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை "மூன் லைட்" திரைப்படம் வென்றது. 

 "லா லா லாண்ட்" திரைப்படம் தான் சிறந்த திரைப்படத்துக்கான விருது என அறிவிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டு, "மூன் லைட்" திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஆஸ்கார் விழா வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தவறு இதுவாகும். 

6 விருதுகள்

அதேசமயம், "லா லா லாண்ட்"  சிறந்த திரைப்படத்துக்கான விருதை தவறவிட்டபோதிலும், சிறந்த இயக்குநர், நடிகை உள்ளிட்ட 6 விருதுகளைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்கார்

சர்வதேச திரை உலகில் மிகவும் கவுரமிக்க விருது ஆஸ்கார் விருதாகும். 89-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில்  உள்ள டால்பி அரங்கில் நடந்தது.  

24 பிரிவு

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் வந்திருந்தனர், இந்தி நடிகை சுஷ்மிதா சென்னும்

பங்கேற்றார்.  நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மி தொகுத்து வழங்கினார். 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. 

எதிர்பார்ப்பு

இதில் இசைக்கு முன்னுரிமை கொடுத்து தயாரிக்கப்பட்ட "லா லா லாண்ட்" சிறந்த திரைப்படத்துக்கான விருது பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  "மூன் லைட்" படம் தட்டிச் சென்றது.  

குழப்பம்

ஆனால், ஒட்டுமொத்தமாக "லா லா லாண்ட் "திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளையும், "மூன் லைட்" திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றன. 

இந்த ஆஸ்கார் விழாவில் மிகப்பெரிய குழப்பம் அரங்கேறியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வாரன் பீட்டி, பே டூனேவே ஆகியோர் தவறுதலாக லா லா லாண்ட் திரைப்படம் சிறந்த திரைப்படமாக அறிவித்தனர். 

இதைக் கேட்டு அந்த திரைப்படத்தின் இயக்குநர் டேமியன் சேசெல்லா உள்ளிட்ட படக்குழுவினர் மேடைக்கு வந்தனர். 

தவறான அறிவிப்பு

ஆனால், மேடைக்கு வந்தவுடன், ஒரு தவறு நடந்துவிட்டது, தவறான காகித உரையை மாற்றி பிரித்து வாரன் பீட்டி படித்துவிட்டார். உண்மையில், சிறந்த திரைப்படமாக மூன் லைட் தான் அறிவிக்கப்பட வேண்டும் என்று டூனவே அறிவித்தார்.

 இதையடுத்து, இரு திரைப்படக்கு ழுவினரும் மேடைக்கு வந்தனர். அப்போது, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் தர்மசங்கடத்தில் இருந்தனர். 

சிறந்த திரைப்படம்

இதையடுத்து, "மூன் லைட்" திரைப்படத்தின் இயக்குநர் அடிலி ரோமான்ஸ்கி, டீட் கார்ட்நர், ஜெர்மி கிளினர் ஆகியோர் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப்பெற்றார்.

நடிகை

"லா லா லாண்ட்" திரைப்படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் சிறந்த நடிகைக்கான விருதைப்பெற்றார். 

முதல் முஸ்லிம்

"மூன் லைட்" படத்தில் நடத்தி மகர்ஷா  அலி சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். இவர்ஆ ஸ்கார் விருது பெற்ற முதல் இஸ்லாமியர் எனும்சிறப்பைப் பெற்றார். 

சிறந்த துணை நடிகைக்கான விருது  "பென்செஸ்" படத்தில் நடித்த வயோஹா டேவிஸுக்கு வழங்கப்பட்டது. 

நடிகர்

சிறந்த நடிகருக்கான விருதை "மான்செஸ்டர்  பை தி சீ" என்ற திரைப்படத்தில் நடித்த   கேசே அப்லிக் பெற்றார்.

இயக்குநர்

"லா லா லாண்ட்" திரைப்படத்தை இயக்கிய டேமியன் சாசெல் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். 

திரைக்கதை

"மூன் லைட்" திரைப்படத்தின் சிறந்த திரைக்கதை வெளிக்கதையில் இருந்து எடுக்கப்பட்டு அதை எழுதியமைக்காக பேரி ஜென்கின்ஸ் மற்றும் டேரல் அல்வின் மெக்ரானே சிறந்த திரைக்கதை எழுதியவர்களுக்கான ஆஸ்கார் விருது பெற்றனர். 

"மான்செஸ்டர் பை தி சீ "படத்துக்காக சிறந்த திரைக்கதை எழுதியதற்காக கென்னத் லோனர்கனுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது அளிக்கப்பட்டது. 

பாடல், இசை

சிறந்த பாடலாக "லா லா லாண்ட்" படத்தின் சிட்டி ஆப் ஸ்டார்ஸ் தேர்வு செய்யப்பட்டது. இதை ஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாசேக், ஜஸ்டின் பால் எழுதியிருந்தனர். 

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை "லா லா லாண்ட்" திரைப்படத்தின இசை அமைப்பாளர் ஜஸ்டின் ஹர்விட்ஸ்க்கு வழங்கப்பட்டது. 

ஒளிப்பதிவாளர்

"லா லா லாண்ட்" திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் லினஸ் சான்ட்கிரெனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது அளிக்கப்பட்டது. 

குறும்படங்கள்

சிறந்த குறும்படமாக கிறிஸ்டோப் டீக் மற்றும் அன்ன உட்வார்டி இயக்கிய "சிங்" திரைப்படம் தேர்வு பெற்றது. 

ஓர்திலாண்டோ வான் இனிசீடல் மற்றும் ஜோனா நடாசேகரா ஆகியோர் இயக்கிய "தி வொய்ட் ஹெல்மெட்ஸ்" திரைப்படம் சிறந்த ஆவணக்குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. 

எடிட்டர்

சிறந்த எடிட்டருக்கான ஆஸ்கார் விருது "ஹேக்சா ரிட்ஜ்" திரைப்படத்தில் பணியாற்றிய ஜான் கில்பர்ட்டுக்கு  வழங்கப்பட்டது. 

தி ஜங்கல் புக்

சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் விருதை "தி ஜங்கில் புக்" திரைப்படம் வென்றது. இந்தபடத்தில் பணியாற்றிய ஆடம் வால்டஸ், ஆன்ட்ரூ ஆர் ஜோன்ஸ், டான் லீமான் ஆகியோர் விருதை வென்றனர். 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதை "லா லா லாண்ட்" திரைப்படத்தில் பணியாற்றிய டேவிட் வாஸ்கோ மற்றும சான்டி ரெலான்ட்ஸ் வாஸ்கோ பெற்றனர். 

அனிமேஷன்

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கார் விருதை "ஜூடோபியா "படம் வென்றது. இந்த படத்தை பைரன் வோர்ட், ரிச் மூர் மற்றும் கிளார்க் ஸ்பென்சர் இயக்கினர். 

சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கார் விருது "பைப்பர் "படத்துக்கு வழங்கப்பட்டது. ஆலன் பாரிலாரோ மற்றும் மார்க் சோதிஹீமர் வென்றனர். 

அன்னியமொழி

சிறந்த அன்னிய மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை அஸ்கார் பர்ஹாதி இயக்கிய" தி சேல்ஸ்மன்" வென்றது. 

சிறப்பு சப்தம்

சிறந்த சவுண்ட் மிக்சிங் விருது "ஹாக்சா ரிட்ஜ் " திரைப்படத்தில் பணியாற்றிய கெவின் ஓ கானல், ஆன்டி ரைட், ராபர்ட் மெக்கென்சி, பீட்டர் கிரேஸ் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. 

"அரைவல்" படத்தில் பணியாற்றிய சில்வியன் பெல்லிமாருக்கு சிறந்த சவுண்ட் எடிட்டருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. 

ஆவணப்படம்

சிறந்த முழுநீள ஆவணப்படமாக எஸ்ரா எடில்மான் மற்றும் கரோலின் வாட்டர் லோ நடித்த "மேட் இன் அமெரிக்கா" தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. 

 "பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ பைன்ட் தெம்" படத்தில் பணியாற்றிய கோலின் அட்வூட்டுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கா ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. 

"சூசைட் ஸ்குவாட்" திரைப்படத்தில் பணியாற்றிய ஜியோர்ஜியோ கிரிகோர்னி, கிரி்ஸ்டோபர் நெல்சன ஆகியோருக்கு சிறந்த ஒப்பனை மற்றும் சிகைஅலங்காரத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. 

click me!