இனவெறி தாண்டவமாடும் அமெரிக்கா… மீண்டும் ஒரு இந்தியர் சுட்டுக் கொலை…

Asianet News Tamil  
Published : Mar 04, 2017, 04:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
இனவெறி தாண்டவமாடும் அமெரிக்கா… மீண்டும் ஒரு இந்தியர் சுட்டுக் கொலை…

சுருக்கம்

In California one of Indian origin shot dead by american

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந் ஒருவர் இனவெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம்அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர், ஹர்னிஷ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் லான்சஸ்டர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.அவரது கடையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்தினருடம் வசித்து வந்தார்.

இந்நிலையில், அங்குள்ள காவல்நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் லான்சஸ்டர் பகுதி கடை வாசலில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துக் கிடப்பதாக  தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்த சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹர்னிஷ் பட்டேலின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

லான்சஸ்டர் பகுதியில் மிகவும் பிரபலமானவராகவும், வாடிக்கையாளர்களின், நண்பராகவும் அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவராகவும் இருந்து வந்த ஹர்னிஷ் பட்டேலின் மரணம் அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் இந்தியாவை சேர்ந்த என்ஜினீயரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த  அதிர்ச்சியில் இருந்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீள்வதற்குள், மேலும் ஒரு இந்தியர் இனவெறிக்கு பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாசமாக வளர்த்த விஷப்பாம்பு.. உணவளிக்கப் போனவருக்கு நேர்ந்த விபரீதம்.. சீனாவில் நடந்த ஷாக் சம்பவம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்…பாரில் ஏற்பட்ட விபத்து சம்பவம்.. ஆடிப்போன காவல்துறை அதிகாரிகள்