இங்கிலாந்து இளவரசி ராணி எலிசபெத்துக்கு அவரின் திருமணப் பரிசாக ஹைதராபாத் நிஜாம் பிளாட்டினத்தால் 300 வைரங்கள் பதிக்கப்பட்ட வைர நெக்லஸ் பரிசாக வழங்கியுள்ளார்.
இங்கிலாந்து இளவரசி ராணி எலிசபெத்துக்கு அவரின் திருமணப் பரிசாக ஹைதராபாத் நிஜாம் பிளாட்டினத்தால் 300 வைரங்கள் பதிக்கப்பட்ட வைர நெக்லஸ் பரிசாக வழங்கியுள்ளார்.
ராணி எலிசபெத்திடம் இருக்கும் விலை உயர்ந்த தங்க, வைர நகைகளில் ஹைதராபாத் நிஜாம் அளித்த நெக்லஸ் மிகவிலைமதிப்பானதாகும்.
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பினார் மன்னர் சார்லஸ்; இன்று அதிகாரபூர்வ பிரகடனம்!!
இங்கிலாந்து ராணியாக கடந்த 1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணி 2ம் எலிசபெத் மகுடம் சூட்டப்பட்டு, ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தார். தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதி ராணி எலிசபெத் மறைந்தார். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்னும் முடிவாகவில்லை.
ராணி எலிசபெத் தனது 70 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள்,அரசிகர்கள், தங்களின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் நாடுகளில் இருந்து பரிசுகள் என ஏராளமானவற்றை பெற்றுள்ளார். அதில் ராணி எலிசபெத்தால் விரும்பி அணியப்படும் நெக்லஸில் முக்கியமானது ஹைதராபாத் நிஜாம் வழங்கிய 300 வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸாகும்.
ராணி எலிசபெத் எதற்காக எப்போதும் ஹேண்ட்பேக் அணிந்து இருப்பார்; மறைந்து இருக்கும் ரகசியம்!!
ஹைதராபாத் நிஜாம் மூலம் பிளாட்டினத்தால் 300க்கும் மேற்பட்ட உயர்ரக வைரங்களால் இந்த நெக்லஸ் உருவாக்கப்பட்டது. பிரான்ஸின் கார்டயர் நிறுவனம் இந்த நெக்லஸை உருவாக்கியுள்ளது.
தி ராயல் பேமலி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராணி எலிசபெத்தின் இரு புகைப்படங்களை பதிவிட்டது. அதில் ஒருபடம் ராணி எலிசபெத் முதல்முறைாக மகுடன் சூட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட படத்தையும், மற்றொரு புகைப்படம் வயதான தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !
முதல் புகைப்படம் கடந்த 1952ம் ஆண்டில் 2ம் எலிசபெத் ராணியாக மகுடன் சூட்டப்பட்ட சில நாட்களில் எடுக்கப்பட்ட இளமைக்காலப் புகைப்படமாகும். அதில் ஹைதராபாத் நிஜாம்அவருக்கு திருமணப் பரிசாக வழங்கிய வைர நெக்லஸை அணிந்து மாலை நேர ஆடையை அணிந்து புகைப்படத்துக்கு எலிசபெத் போஸ் கொடுத்திருந்தார்.
இந்த புகைப்படம்தான் இங்கிலாந்தின் அஞ்சல்தலைகளில் அதிகாரபூர்வமாக அச்சிடப்பட்டுள்ளது. இந்தபுகைப்படம்தான் பிரிட்டன் தூதரகங்கள், ஆட்சிக்கு கீழ்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.
கடந்த 1947ம் ஆண்டு ராணி 2ம் எலிசபெத்துக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணப் பரிசாக ஹைதராபாத் நிஜாம் வழங்கிய நெக்லஸ் என்று தி ராயல் பேலமலி தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள கார்டயர் நிறுவனத்துக்கு ஹைதராபாத் நிஜாம் பிற்பித்த உத்தரவில், ராணி எலிசபெத் அவருக்குரிய திருமணப்பரிசை அவரே தேர்ந்தெடுப்பார் எனத் தெரிவித்திருந்தார். விலைமதிப்புள்ள 300 வைரங்கள் அடங்கிய நெக்லஸை திருமணப் பரிசாக ராணி எலிசபெத் தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.