பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பினார் மன்னர் சார்லஸ்; இன்று அதிகாரபூர்வ பிரகடனம்!!

Published : Sep 09, 2022, 11:07 PM ISTUpdated : Sep 10, 2022, 11:02 AM IST
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பினார் மன்னர் சார்லஸ்; இன்று அதிகாரபூர்வ பிரகடனம்!!

சுருக்கம்

பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று மதியம் மூன்று மணிக்கு பொறுப்புகளை ஏற்கிறார்.  

பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 1952 முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரது உடல்நிலை மோசமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்தது. 96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த போதும் அவர், அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: கோஹினூர் வைரம் இந்தியா திரும்ப வேண்டும்.. ட்விட்டரில் மன்னர் குடும்பத்தை விளாசும் நெட்டிசன்கள் !

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராணியில் உடல் நிலை மோசமான நிலையில் பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. எலிசபெத்தின் உடல் 10 நாட்களுக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்தின் மன்னராகிறார். பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராணி எலிசபெத் எதற்காக எப்போதும் ஹேண்ட்பேக் அணிந்து இருப்பார்; மறைந்து இருக்கும் ரகசியம்!!

செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் மன்னராக சார்லஸ் பிரகடனம் செய்யப்படுவார். ராணியைப் பார்ப்பதற்காக ஸ்காட்லாந்து சென்ற சார்லஸ் நேற்று லண்டன் திரும்பினார். மனைவி கமிலாவுடன் தனி விமானத்தில் அவர் லண்டன் வந்து சேர்ந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சார்லஸ் திரும்பினார். கைகளை பிடித்து பரிவுடன் மக்கள் காட்டிய அன்பை ஏற்றுக் கொண்டார். அப்போது அரண்மனை வாயில் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்து இருந்த பொதுமக்களை மன்னர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மற்றும் ஆறுதல் வாழ்த்து பெற்றார்.

PREV
click me!

Recommended Stories

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!