ஐஸ் வைத்து ஜெர்க்கடித்த நித்யானந்தா... ஜல்சா சாமியாரா..? ஜால்ரா சாமியாரா..?

Published : Dec 20, 2019, 03:41 PM IST
ஐஸ் வைத்து ஜெர்க்கடித்த நித்யானந்தா...  ஜல்சா சாமியாரா..? ஜால்ரா சாமியாரா..?

சுருக்கம்

சத்சங்கம் செய்யும் போது நித்யானந்தா படு லோக்கலாக இறங்கி தமிழகத்தில் உள்ள பலரையும் போற்றி புகழந்து தள்ளியுள்ளது கிண்டலைக் கிளப்பி உள்ளது. 

சத்சங்கம் செய்யும் போது நித்யானந்தா படு லோக்கலாக இறங்கி தமிழகத்தில் உள்ள பலரையும் போற்றி புகழந்து தள்ளியுள்ளது கிண்டலைக் கிளப்பி உள்ளது. நித்யானந்தா இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும், இதனால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நித்யானந்தாவுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே பேசினர். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சதஸங்கத்தின் போது பேசிய நித்யானந்தா, ‘’எஸ்.வி.சேகர் நடிப்பில் மிகப்பெரிய லெஜண்ட். அவர் எடுத்துக் கொண்ட அனைத்து துறையிலும் கடின உழைப்பை கொட்டுபவர்.  அவரைப்போன்றவர்கள் என்னை புரிந்து கொண்டால் அதுவே எனக்கு கொடுப்பினை. ரங்கராஜ் பாண்டே செய்தி உலகில் புதிய ட்ரெண்டை உருவாக்கியவர், வின் டிவி மதன் ரவிச்சந்திரன், மாரிதாஸ், கிஷோர் கே.சாமி ஆகியோரெல்லாம் என்னை புரிந்து வைத்துக் கொண்டதற்காக நான் அவர்களை வணங்குகிறேன்’’என புகழ்ந்து தள்ளியுள்ளார். 

அவரது இந்தப்பேச்சை பலரும் கிண்டலடித்து வருகின்றனர். ‘’நித்யானந்தாவை.. எஸ்வி சேகர், ரங்கராஜ் பாண்டே போன்றோர்கள்  புகழ்வதும்.. நித்யானந்தா திரும்ப இவர்கள் இருவரையும் புகழ்வதும்.. ஒரே கொண்டாட்டம்தான்.. இந்தப்  பட்டியலில் அடுத்து நித்யானந்தா வாயில் இருந்து வர இருப்பது சங்கீ ரஜினிதான்..’’என பதிவிட்டு வருகின்றனர்.   
 

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு