உலகின் மிக நீளமான நாக்கைக் கொண்ட மனிதர்! நாக்கால் ஜெங்கா விளையாடி சாதனை!

By SG Balan  |  First Published Mar 16, 2023, 6:26 PM IST

உலகின் மிக நீளமான நாக்கைக் கொண்ட மனிதர் நாக்கால் ஓவியம் வரைவது, ஜெங்கா பிளாக் விளையாடுவது போன்ற பல்வேறு வித்தைகளைச் செய்துகாட்டுகிறார்.


உலகின் மிக நீளமான நாக்கைக் கொண்ட மனிதர் நிக் ஸ்டோபெர்ல் நாக்கால் ஐந்து ஜெங்கா பிளாக்குகளை நகர்ந்தி கின்னஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாலினாஸ் நகரைச் சேர்ந்தவர் நிக் ஸ்டோபெர்ல். இவர் ஜெங்கா விளையாட்டில் உள்ள 5 பிளாக்குகளை தன் நாக்கைக் கொண்டு 55.526 வினாடிகளில் நகர்த்தி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். நிக்கின் நாக்கு அதன் 10.1 சென்டிமீட்டர்கள் நீளம் கொண்டது.

Tap to resize

Latest Videos

H1-B விசாவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சராசரியாக ஆண் ஒருவருக்கு நாக்கின் நீளம் 7.9 செ.மீ. தான் இருக்கும். பெண்களுக்கு சராசரியாக 8.5 செ.மீ. அளவில்தான் நாக்கு இருக்கும். ஆனால் நிக்கின் நாக்கு சராசரி அளவைவிட 2 செ.மீ. நீளமாக உள்ளது. இது அவர் கின்னஸ் உலக சாதனை படைக்க உதவிய இருக்கிறது.

நிக் தனது நாக்கை ஓவியம் வரைவதற்கும் பயன்படுத்துகிறார். ஒரு இந்தியர் தனது நாக்கால் ஓவியம் வரைவதைப் பார்த்தபோது, தானும் அவரைப்போல நாக்கைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைய முடிவு செய்தாராம்.

இதுமட்டுமின்றி நாக்கை வைத்து பல வித்தைகளைச் செய்து அசத்துகிறார் நிக். ஒரு நிமிடத்தில் அதிக முறை நாக்கால் மூக்கைத் தொடும் சாதனையை முறியடிக்க நிக் முயற்சி செய்தார். ஏற்கெனவே ஒருவர் ஒரு நிமிடத்திற்குள் 281 முறைக்கு நாக்கால் மூக்கைத் தொட்டு கின்னஸ் உலக சாதனை படைத்து இருக்கிறார். அதை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய நிக் 246 முறை மட்டுமே நாக்கால் மூக்கைத் தொட முடிந்தது.

நீளமான நாக்கால் அவர் உணவுப் பொருட்கள் எதையும் சிறப்பாக ருசி பார்த்துவிட முடியாதுதான். ஆனால், சுத்தமாக இருப்பதற்கு நீளமான நாக்கு உதவுகிறதாம்! "நான் சாப்பிடும்போது என் முகத்தில் ஏதாவது ஒரு உணவுத் துணுக்கு ஒட்டிக்கொண்டால் நான் அதை நக்கி எடுத்துவிட முடியும்" என்று சொல்கிறார் நிக் ஸ்டோபெர்ல்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை

click me!