"உங்களுக்காக மடிவேன்".. நியூசிலாந்து பாராளுமன்றம்.. அதிர வைத்த 21 வயது MPயின் கம்பீர உரை - வைரலாகும் வீடியோ!

By Ansgar R  |  First Published Jan 5, 2024, 10:32 PM IST

New Zealand MP Speech Viral : நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சக்திவாய்ந்த பேச்சின் வீடியோ இப்பொது உலகெங்கும் வைரலாகி வருகின்றது. அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் ஹனா-ரவிதி.


ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க் என்பவர் வெறும் 21 வயது மட்டுமே நிரம்பிய இளம் பெண். மற்றும் கடந்த 170 ஆண்டுகளில் இல்லாத வகையில், நியூசிலாந்தின் இளைய எம்.பி-யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஹவுராக்கி-வைகாடோ தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய அந்நாட்டின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய எம்.பி.க்களில் ஒருவரான நனையா மஹுதாவை பதவி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு அக்டோபரில் அந்த இளம் பெண் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அந்த பெண் ஒரு மவோரி இணைத்தவராவார். 

மைபி-கிளார்க் நியூசிலாந்தின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். அவரது தாத்தா, டைதிமு மைபி, மவோரி ஆர்வலர் குழுவான ங்கா டமாடோவாவில் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைதான் இப்பொது வைரலாகி வருகின்றது. அவர் ஆற்றிய உரையின்போது, மைபி-கிளார்க் தங்கள் பாரம்பரிய 'ஹக்கா' அதாவது 'போர் முழக்கம்' செய்து தனது வாக்காளர்களுக்கு தன் வாக்குறுதிகளை அளித்தார். 

Tap to resize

Latest Videos

undefined

மருத்துவமனைகளில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்.. கோவிட் பாதிப்பு அதிகரிப்பால் அமெரிக்கா நடவடிக்கை..

"நான் உனக்காக இறப்பேன்... ஆனால் உனக்காகவும் வாழ்வேன்" என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் என்று நியூசிலாந்து ஹெரால்ட் தனது செய்தியில் கூறியுள்ளது. 21 வயதான ஹன்ட்லி, ஆக்லாந்துக்கும் ஹாமில்டனுக்கும் இடையே உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர், அங்கு அவர் சமூகத்தின் சந்திர நாட்காட்டியின்படி தோட்டக்கலை பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்கும் மவோரி சமூகத் தோட்டத்தை நடத்தி வருகிறார்.

New Zealand natives' speech in parliament pic.twitter.com/OkmYNm58Ke

— Enez Özen | Enezator (@Enezator)

அந்நாட்டு ஊடங்கங்கள் அளித்துள்ள தகவலின்படி, அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை, மாறாக மவோரி மொழியின் பாதுகாவலராகப் பார்க்கிறார் என்றும், மௌரிகளின் புதிய உருவாக்கத்தின் குரல் கேட்கப்பட வேண்டும் என்று அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது. "நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன், தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எனக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த அவையில் கூறப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது," என்று அவர் தனது உரையில் கூறியுள்ளார். 

"வீட்டில் இருந்து இதை பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும்... இது என்னுடைய தருணம் அல்ல, இது உங்களுடையது" என்று தான் கூற விரும்புவதாக தனது உரையின் முடிவில் எம்.பி கூறினார்.

இந்திய பணியாளர்களுடன் கடத்தப்பட்ட கப்பல்.. அனைவரையும் அதிரடியாக மீட்ட கடற்படை கமாண்டோக்கள் - முழு விவரம்!

click me!