வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது.
உலகின் தூங்கா நகரம் என வருணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இதே தேதியில் 21 வருடங்களுக்குமுன்பு, காலை 8:46 மணி, ரோட்டில் இருப்பவர்கள் அதிர்ந்து போய் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்களை அதிர்ந்து பார்க்கிறார்கள். இந்த அதிர்ச்சிக்குக் காரணம், ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரட்டை கோபுரத்தை நோக்கி பறக்கிறது என்பதாலே. சில நொடிகளில், இரட்டை கோபுரத்தின் வடக்கு கட்டிடத்தின் 93-99 இடைப்பட்ட பகுதியில் விமானம் மோதி வெடித்துச் சிதறியது.
வாஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது.காலை 9:03க்கு மற்றொரு விமானம் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த விமானமும் அதே வாஷிங்கடன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?
தாக்குதல் காரணமாக இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நியூயார்க் வான் முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. கட்டிடங்கள் தெருக்களில் சரியத் தொடங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் கட்டிடங்கள் சிக்கிக் கொண்டிருந்தது ஒருபுறமிருக்க, சாலைகளில் சென்றவர்கள் மீதும் கட்டிடத்தின் பாகங்கள் விழத் தொடங்கியது.
அடுத்த தாக்குதல் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது. அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே உறைந்து போனது. அனைவரும் இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு எது என்பதைத் தேடத் தொடங்கினர். தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது அல் கொய்தா. 19 பேரைக் கொண்டு இந்த தாக்குதலை அல் கொய்தா நடத்தியது.
மேலும் செய்திகளுக்கு..பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?
இந்த நேரத்தில் 4வதாக மற்றொரு விமானம் கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எந்த இடத்தில் தாக்குதல் நடத்தும் என எதிர் பார்க்கப்பட்ட நேரத்தில் பென்சில்வேனியா மாகாணம் அருகே வெட்ட வெளியில் விழுந்து நொருங்கியது. இது குறித்து பின்நாளில், 4 வதாக கடத்தப்பட்ட விமானத்திலிருந்த தீவிரவாதிகளுடன், அதில் வந்த பயணிகள் சண்டையிட்டதன் காரணமாகவே வெட்ட வெளியில் விழுந்து நொறுங்கியது என்று அதிகாரிகள் கூறினர்.
கிட்டத்தட்ட சுமார் இரட்டை கோபுரங்களில் இருந்து 1 புள்ளி 4 பில்லியன் குப்பைகள் அகற்றப்பட்டு, 19 ஆயிரத்து 435 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த பயங்கர சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மக்கள் வீதிகளில் இந்தத் தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..மொபைல் போன் வெடித்து பலியான பெண்.. இந்தியாவில் இதுதான் முதல் முறை - அதிர்ச்சி சம்பவம்!