papua new guinea : பப்புவா நியூ கினியாவின் கைனண்டு நகரத்தில் இருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவு ஆனது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதறிப்போன பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கைனண்டு நகரத்தில் இருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை சேதம் மற்றும் உயிரிழப்பு விவரங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 1900-க்கு பின்னர் 7.5க்கு அதிகமாக ரிக்டர் அளவில் இதுவரை 22 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளதாம்.
இதில் கடந்த 1996-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது அதிகபட்சமாக 8.6 ஆக ரிக்டர் அளவில் பதிவானதாம். அந்த நிலநடுக்கத்தின் போது 166 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.