“கழிவு நீரில் போலியோ வைரஸ் பரவியது”.. அவசரநிலை பிரகடனம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

By Raghupati R  |  First Published Sep 11, 2022, 4:53 PM IST

உலகை அச்சுறுத்திய நோய்களின் வரலாற்றில் போலியோவுக்கும் தனி இடம் உண்டு. 


எளிதாக பரவக்கூடிய இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. போலியோ உணவு மற்றும் நீர் மூலம் பரவும் தன்மை கொண்டது. போலியோ நரம்பு மண்டலத்தை தாக்கும் வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்ற வைரஸ்களை காட்டிலும் போலியொவால் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

1988 ஆம் ஆண்டு உலகளவில் 125 நாடுகளில் 3, 50 ஆயிரம் பேர் போலியோவால் பாதிக்கப்பட்டனர். அப்போது உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் மற்றும் ரோட்டரி பவுண்டேஷன் போன்றவை போர்க்கால அடிப்படையில் போலியோவை அழிக்க நடவடிக்கை எடுத்தன. தற்போது போலியோ பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ் தான் நாடுகளில் மட்டுமே உள்ளது.

போலியோமியெலிட்டிஸ் வைரஸ் கிருமியால் உண்டாகும் இந்நோய் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மலம் வழியாக இது மற்றவர்களுக்கும் எளிதில் பரவுகிறது.மலத்துகள் வழியாக மாசடைந்த நீர் மற்றும் உணவுகள் வழியாக இது பரவுகிறது. இந்த வைரஸ் குடல்களில் நுழைந்து அங்கு வளர்ந்து அதிகரித்து குடலில் இருந்து நரம்பு மண்டலத்தில் ரத்த ஓட்டம் வழியாக கலக்கிறது. 

மேலும் செய்திகளுக்கு..“திருப்பூரில் 20 ஆயிரம் டி-சர்ட்.. ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை என்ன ?”.. கே.எஸ் அழகிரி கொடுத்த விளக்கம்.!

இது சில மணி நேரங்களில் முடக்குதலை ஏற்படுத்துகிறது. இளம் பிள்ளைகளுக்கு மிக அதிக பாதிப்பை உண்டாக்கியதால் இளம்பிள்ளை வாதம் என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கழிவு நீரில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாங் ஐலாண்ட் எனுமிடத்திற்கு உட்பட்ட நசாவு கவுன்ட்டியில் கழிவுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அப்போது, அதில் போலியோ வைரஸ் கிருமிகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவசரநிலையை பிரகடனம் செய்தார். இந்நிலையில் அங்கு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்க அனுமதியளிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !

click me!