உலகின் முதல்நாடாக நியூசிலாந்தில் 2017 புத்தாண்டு பிறந்தது; வண்ணமிகு வானவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

 
Published : Dec 31, 2016, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
உலகின் முதல்நாடாக நியூசிலாந்தில் 2017 புத்தாண்டு பிறந்தது;  வண்ணமிகு வானவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

சுருக்கம்

உலகின் முதல்நாடாக நியூசிலாந்தில் 2017 புத்தாண்டு பிறந்தது;

வண்ணமிகு வானவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

உலகிலேயே முதல் நாடாக தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் சிறிய தீவான நியூசிலாந்து நாட்டில் 2017ம் புத்தாண்டு இனிய கொண்டாட்டத்துன் பிறந்துள்ளது.

மக்கள் அங்கு வானவேடிக்கைகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறியும், ஆடிப்பாடியும் புத்தாண்டை வரவேற்று வருகின்றனர்.

பழையன மறந்தும் புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையோடு பிறந்துவிட்டது புதிய ஆண்டு 2017. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் 2017ம் ஆண்டை வான வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க காத்திருக்கின்றனர்.

 உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு சில பிறந்துள்ளது. புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக அந்நாட்டு தலைநகர் வெலிங்டனில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. ஆக்லாந்துநகரில் வாண வெடி வெடித்து புத்தாண்டை இனிதே வரவேற்றனர்.

புத்தாண்டை வரவேற்கும் வகையில், அந்த நாட்டில் உள்ள பே ஆப் பிளன்ட்டி, பேஆப் ஐலாந்து, கிஸ்பார்ன், கோரமன்டல், டாப்போ, குயின்ஸ் டவுன் ஆகிய நகரங்களில் புத்தாண்டை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சரியாக இந்திய நேரப்படி மாலை 4.22 நிமிடங்களுக்கு நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததாக அறிவிக்கப்பட்டதும், ஆக்லாந்துநகரில் உள்ள ஸ்கை டவரில் கண்ணைக் கவரும் வான வடிக்கைகளைவெடிக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

மக்கள் இனிப்புகளை பரிமாறியும், நடனமாடியும், பாடல்களை பாடியும் 2017ம் ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர். 

 

 

 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி