#UnmaskingChina: எவ்வளவு சொல்லியும் அடங்காத நேபாளம்..! சீனாவுடன் சேர்ந்து போட்ட பயங்கர பிளான்.!

By Ezhilarasan Babu  |  First Published Jun 22, 2020, 7:29 PM IST

அணையை பழுது பார்ப்பதற்கான பணியில் பீகார் நீர்வளத்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நேபாளி பாதுகாப்பு படையினர் அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.


உத்தரகாண்ட் மாநிலத்தின் கலபானி, லிபுலேக், லிம்பியதுராவை  அதன் வரைபடத்தில் இணைத்து நேபாளம் இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில், இப்போது பீகார்-நேபாளம் எல்லையிலுள்ள அணைகட்டுமான பணிகளை அந்நாடு தடுத்துவருகிறது. இது  இந்திய ஆயுதப் படைகளுக்கும் நேபாளி படையினருக்கும் இடையில்  மோதலை ஏற்படுத்தும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது, இதில் ஜூன்-15 அன்று இரவு சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இதனால் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் போர் மூலலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது. மேலும் அந்நாட்டின் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் மற்றொரு அண்டை நாடான நேபாளம் ஏற்கனவே இந்திய எல்லைப் பகுதிகளான கலபானி, லிபுலேக், லிம்பியதூரா உள்ளிட்ட பகுதிகளை சொந்தம் கொண்டாடி வருவதுடன் அதை தங்களது  நாட்டு வரைபடத்தில் இணைத்து அந்த வரைபடத்தை அந்நாட்டு பாராளுமன்றத்தின் மூலம் அனுமதி பெற்றுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் நேபாளத்தின் பின்னணியில் சீனா செயல்பட்டு வருகிறது என இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், நேபாளத்தின் நடவடிக்கையை கடுமையாக  எதிர்த்து வருகிறது. ஆனாலும் இந்தியாவின் பல்வேறு உதவிகளால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ள நேபாளம் அவற்றையெல்லாம் மறந்து சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு  இந்தியாவை எதிர்க்கத் துணிந்துள்ளது. எனவே பீகார் மாநிலம் மற்றும் நேபாளத்திற்கு இடையே அமைந்துள்ள தடுப்பணையை பழுதுபார்க்கும் பணிக்கு நேபாளம் இடையூறு  செய்வதாக பீகார் அரசு மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது. பீகார் அரசாங்கத்தின் நீர்வள அமைச்சகம் நேபாளத்தின் இமயமலைப் பகுதியிலிருந்து உருவாகும் ஆற்றில், அதாவது பீகாரின் மோதி டவுனில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் நேபாளம்-பீகார் எல்லையில்,  பீகார் கிழக்கு சம்பாரனில்  கந்தக் என்ற பெயரில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் மழைக்காலத்திற்கு முன்பாக இந்த அணை பழுது பார்க்கப்படுவது வழக்கம். அணையை பழுது பார்ப்பதற்கான பணியில் பீகார் நீர்வளத்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நேபாளி பாதுகாப்பு படையினர் அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து  தெரிவித்துள்ள பீகார் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் ஜா, பழுதுபார்க்கும் பணிகள் நோ மான்ஸ்லாந்தில் வரும் லால் பாக்கியா நதியில் நடைபெறுகிறது. இதுதவிர பல இடங்களில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதை நேபாளம் தடுத்து நிறுத்துகிறது. ஆண்டுதோறும் இதற்கான புனரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், முதல்முறையாக இதுபோன்ற சிக்கலை நாங்கள் எதிர்கொள்கிறோம். இப்போது நேபாளம் இந்தியாவுக்கு மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கந்தக் அணையில் 36 வாயில்கள் உள்ளன, அவற்றில் 18 நேபாளத்தில் அமைந்துள்ளது என நீர்வளத் துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மழைக்காலத்தில் வெள்ளத்தை சமாளிக்க அணைகளை உடனே பழுது பார்க்க வேண்டியது அவசியம், ஆனால் பழுது பார்க்க வேண்டிய பகுதிகளில் நேபாளம் தடைகளை அமைத்துள்ளது. இது கடந்த காலங்களில் நடந்ததில்லை,  உள்ளூர் பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம், இந்த பிரச்சினை சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால் பீகார் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது என தெரிவித்தார். 
 

click me!