உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசை அழிக்க வழி தெரியாமல் திகைத்து வந்த வேளையில் அதனை அழிக்க புதிய தொழில்நுட்பம் கொண்ட முககவசத்தை சுவிட்சர்லாந்து நிறுவனம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசை அழிக்க வழி தெரியாமல் திகைத்து வந்த வேளையில் அதனை அழிக்க புதிய தொழில்நுட்பம் கொண்ட முககவசத்தை சுவிட்சர்லாந்து நிறுவனம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று, துணிகளை கிருமிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் தங்கள் தொழில்நுட்பம் கொரோனா வைரசையும் கொல்வதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சஞ்சீவ் சுவாமி என்பவருக்கு சொந்தமான அந்த நிறுவனம், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முகக்கவசங்களை தயாரிக்கும் சோதனை முயற்சியில் களமிறங்கி உள்ளதாக கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜக் நகரில் அமைந்துள்ள லிவிங்கார்டு டெக்னாலஜி என்ற அந்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பதில் முகக்கவசம் தயாரிக்கப்பட்ட பிறகு, துணியின் மேற்பரப்பில் ஒரு நேர்மறை மின்னோட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயங்குகிறது. இதனால் கிருமிகள் இந்த மாஸ்கின் மேற்பரப்பைத் தொடும்போது, கிருமிகளின் செல் எதிர்மறை மின்னோட்டம் கொண்டதால் அவை அழிக்கப்படுகின்றன.
இந்த தொழில்நுட்பம், இந்த முகக்கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் உகந்ததாக்குகிறது. 210 முறை இந்த ஒரே முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், அவற்றை துவைத்தும் மீண்டும் பயன்படுத்தலாம் என்கிறார்கள் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.