#UnmaskingChina: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விரைந்தார் ராஜ்நாத் சிங்...!! உச்சகட்ட கலக்கத்தில் சீனா..!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 22, 2020, 6:13 PM IST

அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இ-400 ஏவுகணை சிஸ்டம் ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா சுமார் 6000 கோடி ரூபாய்  அளவிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்திய சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு மத்தியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவின் வெற்றி நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஷ்யா தலைநகர் மாஸ்கோ விரைந்துள்ளார். அதில் சீனாவும் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே-9 அன்று இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில் ரஷ்யா மகிழ்ச்சி தினமாக இதை  கொண்டாடிவருகிறது. 1945-இல் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படை ரஷ்யாவிடம் சரணடைந்தது, மேலும் இரண்டாம் உலகப் போர் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததையும், அந்த போரில் சோவியத் ஒன்றியம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் ஆண்டுதோறும் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியை ரஷ்யா நடத்தி வருகிறது. மே- மாதத்தில் நடக்க இருந்த இந்த அணிவகுப்பு கொரோனா நெருக்கடி காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  திங்கட் கிழமை தொடர்ங்கி அடுத்த 3 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது இதில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள உள்ள அனைத்து விருந்தினரையும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் வரவேற்றுவருகிறார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் வழக்கம்போல இந்தியாவும் அதில் கலந்து கொண்டுள்ளது. வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க இந்தியாவின் மூன்று படைகளிலிருந்தும் சுமார் 75 வீரர்கள் ஏற்கனவே ரஷ்யாவுக்கு விரைந்துள்ள நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் சீனாவின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் இதில் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால் ராஜ்நாத் சிங் அவர்களை சந்திக்க மாட்டார் என தெரிகிறது. குறிப்பிடத்தக்க வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் ராணுவம் மற்றும் ராஜதந்திர அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது எனவே சீனர்களை அவர் சந்திக்கப் போவதில்லை என கூறப்படுகிறது. இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஏற்கனவே இந்தியா ரஷ்யாவுடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி  எஸ்-400 ரக ஏவுகணை எதிர்ப்பு  முறையை விரைவாக வழங்குமாறு  ராஜ்நாத்சிங் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பார் என கூறப்படுகிறது. இந்திய-சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இ-400 ஏவுகணை சிஸ்டம் ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா சுமார் 6000 கோடி ரூபாய்  அளவிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த ஏவுகணைகளை உடனடியாக கடற்படையில் இணைக்க இந்தியா  திட்டமிட்டுள்ளது, இந்த ஏவுகணை சிஸ்டம் 400 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்க கூடியது மட்டுமின்றி ஜெட் உளவு விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்றவற்றை கண்காணித்து தாக்கி அழிக்க கூடிய வல்லமை கொண்டது, உலகிலேயே அதிநவீனமான இந்த ஏவுகணை எதிர்ப்பு முறை, சுமார்  400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்க வல்லது,  இந்த அமைப்பு ஒரே நேரத்தில் 80 இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். சீனாவிடம் இந்த ஏவுகணை உள்ள நிலையில், இதை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. 2021 டிசம்பர் மாதத்திற்குள் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இதற்கிடையில் ரஷ்யாவுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை கொண்ட சீனா ஏற்கனவே தனது வடக்கு அண்டை நாடுகளிடமிருந்து s-400 முறையை பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு மேலும் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளதால் அனைத்து வகையான ஆயுதங்களையும் தயார்படுத்தும் வகையில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து  s-400 விரைந்து பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் என தெரிகிறது. ரஷ்யாவுடனான இந்த சந்திப்பில் பாதுகாப்பு தயாரிப்பில் உள்ள இடைவெளியை நிரப்புதல், நிலுவையிலுள்ள ராணுவ தளவாடங்களை விரைந்து பெறுதல் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

 

click me!