புவியின் நேரத்தில் இந்த ஆண்டுமுதல் ஒரு நொடிப்பொழுது அதிகரிப்பு : நாசா விஞ்ஞானிகள் தகவல்

First Published Jan 1, 2017, 11:49 AM IST
Highlights


புவியின் நேரத்தில் இந்த ஆண்டுமுதல் ஒரு நொடிப்பொழுது அதிகரிப்பு : நாசா விஞ்ஞானிகள் தகவல்

புவியின் நேரத்தில் இந்த ஆண்டு முதல் ஒரு நொடிப்பொழுது அதிகரிக்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் செயல் திட்டங்களில், சூரிய டைனமிக் கண்காணிப்புக் குழுவும் ஒன்றாகும். இக்குழு சூரியனை கண்காணிப்பதன் மூலம் புவி நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு நொடியை அதிகமாக சேர்க்க முடிவு செய்துள்ளது.

இந்த அதிகபடியான ஒரு நொடி நேரம் லீப் வருடத்துடன் சேர்க்கப்பட்டு கடைபிடிக்கப்படும். புவியின் சுழற்சி படிப்படியாக குறைவதால் இந்த நேர அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புவியில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பூமி ஒரு முறை தன்னை முழுமையாக சுற்ற 23 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டதாகவும், படிப்படியாக புவியின் சுழற்சி வேகம் குறைந்து தற்போது ஒரு முழுமையான சுற்றுக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் செயற்கைக்கோள்கள் தனது சுற்றுப்பாதையில் சுற்றிவருவதைப் வைத்து இந்த கணப்பொழுதை துல்லியமாக கணக்கிட முடிவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

tags
click me!