ஆஸ்திரேலியாவில் மர்ம நபர் ஒருவர் பல பெண்களுக்கு பயன்படுத்திய ஆணுறைகளை தபாலில் அனுப்பி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 65 பெண்களுக்கு மர்ம நபர் ஒருவர் பயன்படுத்திய ஆணுறைகளை தபாலில் அனுப்பி உள்ளார். அந்த தபாலில் அவர் கடிதங்களையும் சேர்த்து அனுப்பி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெல்போர்னின் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள முகவரிகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களில் நடந்தவை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.. பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் அனைவருக்கும் ஒரே நபர் இந்த கடிதங்களை அனுப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிகிக்கின்றனர்.
சுவாரஸ்யமாக, அந்த பெண்கள் அனைவரும் 1999 இல் நகரின் கில்பிரேடா கல்லூரி தனியார் பெண்கள் பள்ளியில் படித்தனர், இது அவர்களின் முகவரிகள் பழைய பள்ளி ஆண்டு புத்தகத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. காவல்துறையினர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் " இதுகுறித்து புகாரளித்தவர்களில் பெரும்பாலோர் பல கடிதங்களைப் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது, அவை அனைத்தும் சந்தேகத்திற்குரிய பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்..
விசாரணை தீவிரம்
பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை துஷ்பிரயோக விசாரணை குழு இந்த வழக்கை விசாரித்து வருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் முன் வந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவுமாறு காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : மசாஜ் செண்டரில் நடந்த பாலியல் தொழில்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்